இந்த முறை தப்பல... சிறந்த நடிகர் விருதை கைப்பற்றிய 'ஜோக்கர்' ஹீரோ ஜோக்குயின் பீனிக்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸுக்கு கிடைத்துள்ளது.
92 வது ஆஸ்கர் விருது விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கம் திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிகிறது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுகிறது.
சிறந்த நடிகருக்கான விருது, ஜோக்கர் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ஜோக்கின் பீனிக்ஸுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பலத்த கைதட்டல்களுக்கு இடையே விருதை பெற்றார். இந்த விருதுக்கு நான்குமுறை பரிந்துரைக்கப்பட்ட இவர், இப்போது முதன்முறையாக பெற்றுள்ளார்.
இந்தப் படத்துக்கு, சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நாமினேஷன் லிஸ்ட்:
Antonio Banderas - "Pain and Glory"
Leonardo DiCaprio - "Once Upon a Time in Hollywood"
Adam Driver - "Marriage Story"
Joaquin Phoenix - "Joker"
Jonathan Pryce - "The Two Popes"


Click it and Unblock the Notifications











