Joe Blue Sattai Maran Review: "உண்மையாவே நல்ல ஃபீல்குட் மூவி..”: 'ஜோ' ப்ளு சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள ஜோ திரைப்படம் நேற்று வெளியானது.
ஹரிஹரன் ராம் இயக்கியுள்ள 'ஜோ’ காதல் பின்னணியில் ஃபீல்குட் மூவியாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜோ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜோ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானவர் ரியா ராஜ். தொடர்ந்து சின்ன திரையில் தடம் பதித்து வந்த அவர், தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள ஜோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஹரிஹரன் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரியோ ராஜ்ஜுடன் மாளவிகா மனோஜ், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். அதில், ஜோ படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல முடியாது, ஏனென்றால் இதில் இரண்டு கதைகள் இருக்கு. முதல் கதையின் லீடு எடுத்து தான் இரண்டாவது கதையின் முடிவாக வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
முதல் கதையின் ஆரம்பம் என்றால், ஹீரோ, ஹீரோயின் இருவருமே ஒரே காலேஜ்ஜில் படிப்பதாகவும், அப்போது அவர்கள் காதலிப்பதாகவும் கதை போகிறது. இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தாலும், ரொம்ப சீரியஸா லவ் பண்றாங்க. ஒருகட்டத்தில் இரண்டு பேரும் பிரிஞ்சிருக்க வேண்டிய கட்டாயம் வருது. அந்த நேரம் ஹீரோயினுக்கு அவங்க வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்க.
இதனால ஹீரோ தன்னுடைய காதலி வீட்டுல போய் பொண்ணு கேக்கப் போக, அங்க அடிதடி பஞ்சாயத்து ஆகி, இரண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க. அதன்பிறகு அவங்க என்ன ஆனாங்க என்பது தான் இந்தப் படத்தோட கதை என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். மேக்கிங் பற்றி விமர்சனம் கொடுத்துள்ள அவர், இந்தப் படத்தில் அறிமுகமான பெரிய நடிகர்கள் இல்லையென்றாலும், நல்ல ரசிச்சு பார்க்க முடியுது.
அதேபோல், படத்தின் இடைவேளை, க்ளைமேக்ஸ் இரண்டுமே சூப்பராக வந்துள்ளது. ஆனால், ஜோ படத்தின் பிரச்சினையே முதல் பாதியும் இரண்டாம் பாதியும் வேற வேற கதையாக இருக்கிறது. முதல் பாதியில் இருந்து லீட் எடுத்து, க்ளைமேக்ஸ்ல கொடுத்துருக்காங்க. அது சரியா இருந்தாலும், நிறைய காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும், சார்லி கேரக்டரும் பெரிதாக ஈர்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஒரு நல்ல கதை அதுக்கு தேவையான சீன்ஸ் உட்பட எல்லாவற்றையும் அதுவே எடுத்துக்கும்ன்னு சொல்வாங்க. ஆனால், ஜோவில் வலுகட்டாயமாக சில காட்சிகளை சேர்த்துள்ளதாக தெரிகிறது. அதெல்லாம் படம் பார்க்கும் போது ரசிக்க முடியவில்லை. இளைஞர்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டதில் ஜோ வெற்றிப் பெற்றாலும், லவ் டுடே மாதிரி கமர்சியல் எலிமெண்ட்ஸ் இல்லை என கமெண்ட்ஸ் செய்துள்ளார். மொத்தத்தில் பெரிதாக அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக எடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











