அடித்தாலும் குடித்தாலும் அப்பா அப்பாதான்.. பாலாஜிக்கு ஆறுதல் சொல்லும் ஜோ மைக்கேல்!
சென்னை: பாலாஜி முருகதாஸின் அப்பா மரணம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு ஜோ மைக்கேல் ஆறுதல் கூறியுள்ளார்.
மிஸ்டர் இந்தியா உட்பட பல்வேறு பட்டங்களை கைப்பற்றியவர் பாலாஜி முருகதாஸ். தான் சாதித்த பிறகும் எந்த ஊடகமும் தன்னை கண்டு கொள்ளவில்லை என ஆதங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அடிக்க பாய்ந்தது, ஆரி மற்றும் சனம் ஷெட்டியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது என பல சர்ச்சைகளில் சிக்கினார்.

பாலாஜி அப்பா மரணம்
இதனால் ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4ன் ரன்னர் அப் ஆனார் பாலாஜி முருகதாஸ். இந்நிலையில் பாலாஜியின் அப்பா, முருகதாஸ் இன்று காலமாகியுள்ளார்.

ஜோ மைக்கேல் இரங்கல்
இதனை தொடர்ந்து பாலாஜிக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஜோ மைக்கேலும் பாலாஜியின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடித்தாலும் குடித்தாலும்..
இதுதொடர்பான அவரது டிவிட்டில், அடித்தாலும் குடித்தாலும் அப்பா அப்பாதான்.. என்னைக்குமே தப்பானவர் கிடையாது!! ஸ்டே ஸ்ட்ராங் தம்பி பாலாஜி முருகதாஸ் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் RIP என்றும் பதிவிட்டுள்ளார்.

நினைவுப்படுத்திய ஜோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி, தனது அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என்றும் நள்ளிரவில் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். அதனை நினைவு படுத்தும் வகையில் அடித்தாலும் குடித்தாலும் அப்பா அப்பாதான்.. என பதிவிட்டுள்ளார் ஜோ மைக்கேல்.


Click it and Unblock the Notifications











