'குரைக்கும் நாய் கடிக்காது' டிவிட்டை டெலிட் செய்த பாலா.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஜோ மைக்கேல்!
சென்னை: பாலாஜி முருகதாஸ் பதிவிட்டிருந்த குரைக்கும் நாய் கடிக்காது என்ற டிவிட்டை டெலிட் செய்திருப்பதாக ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
அழகிப்போட்டி நடத்தும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேலுக்கும் பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸுக்கும் மோதல் நிலவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாலாஜி, தனது நிறுவனம் நடத்திய அழகிப்போட்டியை டுபாக்கூர் என்று கூறியதாக அவருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினார் மைக்கேல்.

வாய் திறக்கவில்லை
ஆனால் பாலாஜி தரப்பில் இருந்தவர்கள், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பாலாஜி நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என்று கூறியிருந்தனர். ஆனால் வெளியே வந்த பாலாஜி அதுகுறித்து வாய் திறக்கவில்லை.

போனில் பேசிய ஆடியோ
மாறாக குரைக்கும் நாய் கடிக்காது என ஜோ மைக்கேலை சாடும் வகையில் டிவிட்டியிருந்தார். இதனை பார்த்த ஜோ மைக்கேல், சொன்னதை நிரூபிக்க துப்பில்ல, பழமொழி வேற என விளாசினார். இதனை தொடர்ந்து பாலாஜி ஜோ மைக்கேலிடம் பேசிய ஆடியோ வெளியானது.

ஜோ மைக்கேலின் மீம்
அதில் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது நான் சட்டப்படி பார்த்துக் கொள்கிறேன் என்றார் பாலாஜி. இந்நிலையில் மீம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஜோ மைக்கேல். அதில் முதலில் வடிவேல் ஓவர் சீன் போட்டு பேசுவதாகவும் பின்னர் மன்னிப்பு கேட்டு கெஞ்சுவதாகவும் உள்ளது.

தக்காளி தொக்கா?
மேலும் குரைக்கும் நாய் கடிக்காது என்ற டிவிட் டெலிட் செய்யப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜோ மைக்கேல். மேலும் இன்ஸ்டாவில் 5 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்ததான் செலிபிரிட்டின்னா அப்போ நம்ம சூப்பர் மாடல் என்ன தக்காளி தொக்கா என்று மீரா மிதுனையும் இழுத்துள்ளார்.

என்கரேஜ் பண்ணுங்கடா
மேலும் இன்னைக்கு ரியல் ஹீரோஸ நாம எங்கடா ஃபாலோ பண்றோம் ரீல் ஹீரோஸதான்.. உன் தெருவ சுத்தி ஒரு நல்லவன் இருப்பான் அவன என்கரேஜ் பண்ணுங்கடா என்று பாலாஜியின் ரசிகர்களுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











