மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!

சென்னை: பாலாவுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக அறிவித்த ஜோ மைக்கேல், பாலாவை மன்னிக்கணும்னா அவர் இந்த 3 விஷயங்களை செய்யணும் என கண்டிஷன் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் ரன்னர் அப்பான பாலாஜி முருகதாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் ஹேட்டர்களும் உள்ளனர்.

ஜோ மைக்கேல் நிறுவனத்தை தாக்கி பாலா பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தற்போது அவருக்கு வெளியே சிக்கலை உண்டாக்குமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

பத்ரகாளி எடிட்

பத்ரகாளி எடிட்

பாலாஜி முருகதாஸை பத்ரகாளியின் புகைப்படத்துடன் சித்தரித்து செய்யப்பட்ட எடிட்டை ஷேர் செய்த ஜோ மைகேல், பாலாவின் ஆர்மியினர் செய்த இந்த மோசமான காரியத்துக்காக கம்பி எண்ண போகிறார் என வார்னிங் கொடுத்து போட்ட ட்வீட் பரபரப்பை கிளப்பியது. மேலும், பாலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

லீகல் ஆக்‌ஷன்

லீகல் ஆக்‌ஷன்

பாலாஜி முருகதாஸுக்கு எதிரான மான நஷ்ட வழக்கை தொடர தனது லீகல் டீம் எல்லா வேலைகளையும் செய்து வருகிறது. சட்டப்படி பாலா மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை இனிமேலும், செய்ய தயங்கப் போவதில்லை என அதிரடியாக இன்று இன்னொரு ட்வீட்டும் ஜோ மைக்கேல் போட்டார்.

மன்னிச்சு விட்ருங்க

மன்னிச்சு விட்ருங்க

அந்த ட்வீட்டை தொடர்ந்து அடுத்ததாக, எனக்கு நிறைய மெசேஜஸ் வருது, மன்னிச்சு விட்றுங்க, பாவம் வளருற பையன் ஏதோ தெரியாம சொல்லிட்டான் மற்றும் மன்னிக்கிற மனசுதான் கடவுள் என சொல்றாங்க, நானும் மன்னிச்சிடலாம்னு நினைக்கிறேன். ஆனால், இந்த 3 கண்டிஷனுக்கு பாலா ஒப்புக் கொண்டால் மட்டுமே அது பற்றி யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

3 கண்டிஷன்

3 கண்டிஷன்

இதற்கு முன்பாக பிக் பாஸ் சீசனில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், ஆயிரம் ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும் மற்றும் ஒரு வாரம் விவசாயம் பண்ண வேண்டும் என்று ஜோ மைக்கேல் கண்டிஷன் போட்டுள்ளார். ஜோ மைக்கேலின் இந்த ட்வீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

விவசாயம் பண்ணுவாரா

விவசாயம் பண்ணுவாரா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அண்ணன் கிட்ட இருந்து விவசாயம் செய்றதை இன்ஸ்பயராக எடுத்துக்கிட்டேன். ஊருக்கு போனதும் ஒரு இடம் வாங்கி விவசாயம் பண்ண போறேன் என பாலாஜி முருகதாஸ், கமல் முன்னிலையில் வாக்கு கொடுத்து இருந்தார். தற்போது ஜோ மைக்கேலும் ஒரு வாரம் பாலா விவசாயம் பண்ண வேண்டும் என்கிற கண்டிஷனை போட்டுள்ளார். சொன்னது போல பாலா விவசாயம் செய்வாரா? அல்லது சும்மா மேடை பேச்சா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜோவுக்கு பதில்

ஜோவுக்கு பதில்

பாலாஜி முருகதாஸ் மீது தொடர்ந்து ஜோ மைக்கேல் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பாலா பதில் அளிப்பாரா? அல்லது அந்த பிரச்சனையை பேசி தீர்த்து விடுவாரா? என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Recommended Video

பிரிந்து போக இது காதல் இல்லை! Aariக்கு Nisha வாழ்த்துக்கள் - Filmibeat Tamil
பாலாவின் வீடியோ

பாலாவின் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெறும் ட்வீட் மட்டுமே போட்டு வரும் பாலா, வீட்டிற்கு சென்றபோது கிடைத்த வரவேற்பு, ரசிகர்களுக்காக நன்றி தெரிவிக்கும் வீடியோ என எதையுமே இன்னும் போடவில்லை. பாலாவை மீண்டும் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பாலா ஹீரோவாகவும் ஷிவானி ஹீரோயினாகவும் படத்தில் நடிப்பார்களா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X