தப்பு பண்ணா தப்பிக்க முடியாது.. மீரா மிதுன் கைதுக்கு ஜோ மைக்கேல் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கும் நடிகை மீரா மிதுன் கைதுக்கு ஜோ மைக்கேல் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
Recommended Video
தன்னை கைது செய்வது என்பது கனவில் மட்டும் தான் நடக்கும் என காவல்துறைக்கே சவால் விட்டு வீடியோ போட்ட மீரா மிதுனை கேரளாவில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யும் போது நடிகை மீரா மிதுன் கத்தி கதறி போலீசாரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் விதமாக அவதூறு பரப்பி வெளியிட்ட வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரியாக்ஷன்கள் குவிந்து வருகின்றன.

மீரா மிதுன் கைது
தன்னைத் தானே சூப்பர் மாடல் எனக் கூறிக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் கேரளாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். போலீசார் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரை கைது செய்யும் போதும் ஆர்ப்பாட்டம் குறையவில்லை.

அவதூறு பேச்சு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குறித்து கொச்சையாக பேசி பரபரப்பை கிளப்பிய மீரா மிதுன் பின்னர் விஜய் மற்றும் சூர்யாவிடம் தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவில் பட்டியலினத்தவர் குறித்து அவர் பேசிய அவதூறு பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. விசிகாவினர் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்தனர்.

இயக்குநர் அழுத்தம்
மூடர்கூடம் இயக்குநர் நவீன் இன்னுமா மீரா மிதுனை கைது செய்யவில்லை என்கிற ரீதியில், "சமூகநீதியே தமிழகத்தின் முதன்மை கொள்கை என்பதையும், சக மனிதர்களை சாதி அடிப்படையில் இழிவாக பேசுவதை தமிழகம் ஏற்காது என்பதையும் உணர்த்தும் நேரமிது. இந்த பெண் மீது இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி இருந்தார்.

ரசிகர்கள் குஷி
கோலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பலரையும் வாய்க்கு வந்த படி கொச்சையாக பேசி வந்த துணை நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், #MeeraMithun ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தப்பு பண்ணா தப்பிக்க முடியாது
பாலாஜி முருகதாஸ் விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய ஜோ மைக்கேல் மீரா மிதுன் கைதானது விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் என ட்வீட் போட்டு இருக்கிறார். மேலும், தப்பு பண்ணா தப்பிக்க முடியாது என்று கூறி மீரா மிதுனின் கடைசி டிராமா என கைதுக்கு முன்பாக அவர் வெளியிட்ட வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார்.

நேரா கீழ்ப்பாக்கம்
மேலும், நடிகை மீரா மிதுனை ஜெயிலுக்கு அனுப்பாம நேரா கீழ்ப்பாக்கம் அனுப்புங்க என்றும் அதற்காகத்தான் கடைசி வீடியோவில் அப்படியொரு ஆக்டிங் கொடுத்தார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அப்படியெல்லாம் விடக்கூடாது பாய் பிரண்ட் உடன் உருளும் போதும் சரக்கு அடிக்கும் போதும் மனநலம் நல்லா இருந்துச்சா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் போட்டு மீரா மிதுனை வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











