சொருகிடுவேன் பஞ்சாயத்து ஓகே.. பூர்ணிமா பேசிய கெட்ட வார்த்தைக்கு கேள்வி கேட்கலையே கமல்.. நல்ல தரம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டின் தரம் பற்றி கமல் பேசிய நிலையில், அந்த தரம் எந்த அளவுக்கு கேவலப்பட்டு கிடக்கிறது என எடிட் செய்யப்பட்ட வீடியோவை ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கழுவி ஊற்றி உள்ளார்.
நிக்சன் பேசிய சொருகிடுவேன் மற்றும் அர்ச்சனா வினுஷாவை பகடை காயாக பயன்படுத்தியது குறித்தெல்லாம் கண்ணை உருட்டி மிரட்டி கமல் செம ஆக்டிங் கொடுத்தார் என்றும் ஆனால், மாயா, பூர்ணிமா எல்லாம் அநியாயத்துக்கு கெட்ட வார்த்தை பேசுறாங்களே அதை பத்தி மட்டும் ஆண்டவர் ஏன் கேட்கவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கெட்டுப்போன தரம்: இந்த சீசன் நிகழ்ச்சி போர் என்றும் போட்டியாளர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் என ரசிகர்கள் மட்டுமின்றி கமல் சாரே கழுவி ஊற்றி உள்ளார். மேலும், பிக் பாஸ் வீட்டின் தரம் பற்றி கமல் பேசிய நிலையில், நிக்சன், ஐஷு பண்ண லீலைகள், பூர்ணிமா ஒரு ஃப்லோவுல கெட்ட வார்த்தை பேசியிருப்பேன் என சொல்வது, ஒவ்வொரு போட்டியாளரும் அசிங்க அசிங்கமாக ஓடிடியில் வரும் வெப்சீரிஸ் வசனங்கள் போல பிக் பாஸ் வீட்டிலும் பேசி வருவதை எல்லாம் எடிட் செய்து இதுதான் பிக் பாஸ் வீட்டின் தரம் என ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், அந்த வீடியோவை ஷேர் செய்து ஜோ மைக்கேல் ட்வீட் போட்டுள்ளார்.
பூர்ணிமா மட்டும் பேசலாமா?: பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தையையோ வன்முறை தொனி கலந்த வார்த்தையையோ நிக்சன், தினேஷ் உள்ளிட்டோர் பேசக் கூடாது என கமல் எச்சரித்த நிலையில், அப்போ பூர்ணிமா பேசியது எல்லாம் தேவாரமும் திருவாசகமுமா கமல் சார் என ஜோ மைக்கேல் கேள்வி எழுப்பி உள்ளார். சனம் ஷெட்டி உள்ளிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் பலரும் இந்த ஷோவை கமல் சரியாக நடத்தவில்லை என்றும் ஹோஸ்ட்டை உடனடியாக மாற்றினால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி உருப்படும் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சீக்கிரம் முடிங்க பாஸ்: இந்த சீசன் டைட்டில் வின்னர் விசித்ரா தான் என்றும் அர்ச்சனாவையே கமல் விளாசிய நிலையில், விசித்ரா அல்லது மாயா இருவரில் ஒருவருக்குத்தான் டைட்டில் மற்றும் ரன்னர் அப் கிடைக்கும் என ரசிகர்கள் முடிவு கட்டிய நிலையில், சீக்கிரம் இந்த சீசனை முடித்து விடுங்க பாஸ் என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











