இளம் பெண்ணை ஏமாற்றினாரா பாலாஜி முருகதாஸ்? ஆபாசமாக பேசிய ஆடியோவை வெளியிட்ட ஜோ மைக்கேல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் போட்டிகளில் பங்கேற்று ரன்னர் அப் மற்றும் டைட்டிலை வென்ற பாலாஜி முருகதாஸ் மீது இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்திருப்பது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சீசன் 4 போட்டியாளர் சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் அழகிப் பட்டம் ஒன்றை வாங்கியதாக பாலாஜி முருகதாஸ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதுகுறித்து எழுதப்பட்ட கடிதத்தையே பிக் பாஸ் நிகழ்ச்சி மறைத்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

பெண்ணை ஏமாற்றினாரா பாலா

பெண்ணை ஏமாற்றினாரா பாலா

பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் இளம் பெண் ஒருவரை காதலிப்பது போல ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், தற்போது தன்னை ஏமாற்றி விட்டார் பாலா என்றும் பணத்தையும் திரும்ப தரவில்லை என சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக ஜோ மைக்கேலிடம் சொல்லி புலம்பி இருக்கிறார் அந்த இளம்பெண்.

ஜோ மைக்கேல் விளாசல்

ஜோ மைக்கேல் விளாசல்

பாலாஜி முருகதாஸை தொடர்ந்து எதிர்த்து வரும் ஜோ மைக்கேல் இந்த விவகாரத்தில் பாலாவின் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என அந்த பெண் தன்னிடம் சொன்ன மோசடி புகார்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும், பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணிடம் பாலா ஆபாசமாக பேசிய ஆடியோவையும் லீக் செய்துள்ளார்.

இளம் பெண்ணுக்கு மிரட்டல்

இளம் பெண்ணுக்கு மிரட்டல்

முன்னதாக ஜோ மைக்கேலிடம் பாலா பற்றி சொன்ன அந்த பெண் அதற்கு பின்னர், அய்யோ எதையும் வெளியே சொல்லிடாதீங்க அண்ணா எனக்கு காசு வேண்டாம் நிம்மதி தான் வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை பார்த்ததும் பாலாவும் அவரது சகோதரர் ரமேஷும் அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர் எனத் தெரிகிறது என ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சண்டை

ஏற்கனவே சண்டை

ஏற்கனவே பாலாவுக்கும் ஜோ மைக்கேலுக்கும் சனம் ஷெட்டி விவகாரத்தில் அனிதா சம்பத் விவகாரத்திலும் பெரிய சண்டை வெடித்தது. இந்நிலையில், பாலா பற்றி இளம் பெண் சொன்ன தகவல்களை அம்பலப்படுத்தி பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல்.

அசீமே பரவால்ல

அசீமே பரவால்ல

ஜோ மைக்கேல் மேலும், ரியல் அப்யூசர் பாலா தான் என்றும் இவருக்கு அசீம் எவ்வளவோ பரவாயில்லை என்றும் ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். மேலும், இளம் பெண்கள் இதுபோன்ற ஆட்களின் காதல் வலைகளில் விழ வேண்டாம் என்றும் எச்சரித்து பதிவுகளை போட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X