For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களை இழிவு படுத்தியதாக புகார்.. அவர கைது பண்ணிட்டாங்களாம்.. மீரா மிதுன் செம ஹேப்பி அண்ணாச்சி!

    |

    சென்னை: பெண்களை இழிவாக பேசியதாக எழுந்த புகாரில் மீரா மிதுனுக்கு ஆகாதவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சர்ச்சை கருத்துகளை கூறியும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். மாடலான இவர் பண மோசடி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனை என அடுத்தடுத்த எழுந்த பிரச்சனைகளால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    அப்போதுதான் அவருக்கு எதிராக களம் இறங்கினார் தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன். மீரா மிதுனின் வண்டவாளத்தையெல்லாம் ஜோ மைக்கெல் தண்டவாளத்தில் ஏற்ற, கடுப்பானார் மீரா மிதுன்.

    டகால்டி படத்தின் சிங்கிள்.. நாளை ரிலீஸ்... சந்தானத்தின் வெற்றிப் பயணம் தொடருமா

    ஆடியோக்கள்

    ஆடியோக்கள்

    இதனால் கடுப்பான மீரா மிதுன், ஜோ மைக்கேலை ஆளை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதுதொடர்பாக அவர் போனில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

    கமிஷனரிடம் புகார்

    கமிஷனரிடம் புகார்

    இதனால் அதிர்ந்து போன ஜோ மைக்கேல் மீரா மிதுனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

    கெட்டவார்த்தையால்..

    கெட்டவார்த்தையால்..

    அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வந்தது. ஜோ மைக்கேல் குறித்து மீரா மிதுன் கெட்ட வார்த்தைகளால் கேவலமாக பேசும் வீடியோக்கள் வெளியானது.

    போலீஸில் புகார்

    போலீஸில் புகார்

    இந்நிலையில் ஜோ மைக்கேல் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் பெண்கள் குறித்து இழிவாக கருத்து தெரிவித்ததாக அவர் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி புகார் கொடுத்தார்.

    அவதூறு பேச்சு

    அவதூறு பேச்சு

    இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத ஜோ மைக்கேல் வீட்டிற்கு அழைக்க வந்த பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    மீரா மிதுன் ஹேப்பி

    மீரா மிதுன் ஹேப்பி

    இதனால் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தனக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்த ஜோ மைக்கேல் கைது செய்யப்பட்டுள்ளதால் நண்பர்களிடம் நிம்மதி என கூறி வருகிறாராம் மீரா மிதுன்.

    English summary
    Business man Joe michel has been arrested for abusing woman on social media. Meera mithun shares happiness with her friends for Joe michel arrest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X