போதையில் ஸ்விக்கி பாய் மீது காரை மோதி.. யாஷிகாவை கோர்த்துவிட்டு.. எஸ்கேப்பான பாலாஜி.. பகீர் தகவல்!
சென்னை: பாலாஜி முருகதாஸ் குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும், தோழியான நடிகை யாஷிகா ஆனந்தை கோர்த்துவிட்ட தகவலும் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களுல் ஒருவர் பாலாஜி முருகதாஸ்.
மாடலான இவர் மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பட்டங்களை வென்றிருக்கும் இவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

சப்போர்ட் இல்லாமல்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த வாரம், கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது, கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவன், எந்த சப்போர்ட்டும் இல்லாமல் வளர்ந்தேன்.

சேர்ந்து சரக்கடிப்பார்கள்
அப்பாவும் அம்மாவும் சேர்ந்து குடிப்பார்கள். என்னை கவனிக்கவில்லை. எனக்கு ஒரு நாளும் சமைத்து கொடுத்தது இல்லை என பெற்றோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். நண்பர்கள் உதவியோடு வளர்ந்ததாகவும் தான் வெற்றி பெற்ற போது கூட தனது அப்பா அம்மா அதில் பங்கேற்கவில்லை என்றும் உருகியிருந்தார்.

ஹீரோவான பாலாஜி
மேலும் குழந்தையை ஒழுங்காய் வளர்க்க தெரியாத உங்களுக்கு ஏன் பிள்ளைகள் என்றும் கேட்டிருந்தார் பாலாஜி முருகதாஸ். பாலாஜியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது பேச்சை கேட்ட பலரும் ஒரே நாளில் தங்களின் ஹீரோ பாலாஜிதான் என்றனர்.

நீ யோக்கியமா?
ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே அவரது சாயம் வெளுத்தது. பாலாஜி முருகதாஸ் குடியும் கும்மாளமுமாய் இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் நீ யோக்கியமா என்று விமர்சிக்க தொடங்கினர்.

திடுக்கிடும் தகவல்கள்
இதைத் தொடர்ந்து அவரது போட்டோக்களும் வீடியோக்களும் அவரது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் பல பேஜன்ட்டுகளை நடத்தியுள்ள தொழில் அதிபர் ஜோ மைக்கேல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பாலாஜி முருகதாஸ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியது
அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு ஒரு செய்தி பரவியது. நடிகை யாஷிகா ஆனந்த் குடித்து விட்டு போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் என்று. ஆனால் நடந்தது, யாஷிகாவும் பாலாஜியும் நண்பர்கள். பாலாஜி முருகதாஸும் அவரது நண்பரும்தான் காரில் இருந்தனர்.

பாலாஜி எஸ்கேப்
பாலாஜி முருகதாஸ் குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டார். இதில் ஸ்விக்கி டெலிவரி பாய் படுகாயமடைந்தார். உடனடியாக தோழியான யாஷிகா ஆனந்திடம் உதவிக்கேட்டு வரச்சொன்னார் பாலாஜி. ஆனால் யாஷிகா வந்ததும் பாலாஜி முருகதாஸ் எஸ்கேப் ஆகிவிட்டார்.

யாஷிகா விளக்கம்
யாஷிகா ஆனந்த் காருக்குள் இல்லாத நிலையில் அவர் விபத்து நடந்த இடத்தில் இருந்ததால், அவர்தான் விபத்தை ஏற்படுத்திவிட்டதாக ஊடகங்கள் செய்தி போட்டுவிட்டன. இதுதொடர்பாக யாஷிகா ஆனந்த் விளக்கம் கொடுத்து நடந்ததை கூறினார்.

ஓடியிருக்க மாட்டார்
பாலாஜி முருகதாஸ் சொன்னது போல் அவரை அவரது அம்மா அப்பா ஒழுங்காய் வளர்க்கவில்லை. ஒழுங்காய் வளர்த்திருந்தால், குடி போதையில் ஒரு அப்பாவி மீது காரை மோதிவிட்டு தப்பித்து ஓடியிருக்கமாட்டார் என கூறியுள்ளார் ஜோ மைக்கேல். தற்போது பிக்பாஸ் வீட்டிலும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு என ரூடாக நடந்து வரும் பாலாஜி முருகதாஸுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











