மீண்டும் ’ஜோ’ ஜோடியை ஓகே செய்த ரியோ ராஜ்.. யாரு டைரக்டர் தெரியுமா?.. அடுத்த சிக்ஸர் கன்ஃபார்ம்!
சென்னை: 'ஜோ' படத்தின் வெற்றிக்கு பிறகு ரியோ ராஜுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த அதிரடி வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜோ பட ஹீரோயினுடன் ரியோ ராஜ் களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது.

ஜோ ஜோடி: மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக் ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் களமிறங்குகிறார்கள். இன்று தொடங்கி இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆண்களின் பிரச்சனை: "திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் " என சொல்லிவிட்டு தன்னம்பிக்கையோடு சிரிக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல். இந்த படத்திலாவது அந்த ஹீரோயினை கொன்னுடாதீங்க பாஸ் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரியோ ராஜ் படங்கள்: விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக மாறினார். அதன் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்த ரியோ ராஜ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை பிளாக் ஷீப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருந்தார். இந்நிலையில், இன்னொரு திறமையான பிளாக் ஷீப் டீம் இயக்குநர் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார். பாரதிராஜா, சாண்டி மாஸ்டர், நட்டி நட்ராஜ் உடன் இணைந்து "நிறம் மாறும் உலகில்" படத்திலும் ரியோ ராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











