யம்மாடியோவ்.. 13,138 சதுர அடிக்கு பிரம்மாண்ட பங்களாவா?.. ஷாருக்கான் பட வில்லனே இப்படி ஜமாய்க்கிறாரே!
மும்பை: பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் (John Abraham) மும்பையின் முக்கிய வீதியில் உள்ள பிரம்மாண்ட பங்களாவை வாங்கி இருப்பது பாலிவுட் பிரபலங்களையே பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆடிய நிலையில், அந்த படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக மிரட்டியிருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் அவர் தொடர்ந்து வீடுகளிலும், நிலங்களை வாங்கிப் போடுவதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
51 வயதாகும் நடிகர் ஜான் ஆபிரகாம் பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் விக்கி டோனர் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் உள்ளார். சுமார் 13,138 சதுர அடி பங்களாவை எத்தனை கோடி கொடுத்து ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளார் என தெரிந்தால் தலையே சுற்றி விடும். பதான் நடிகர் பற்றியும் அவர் வாங்கிய பங்களா பற்றியும் இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

விஜய் பட நடிகையுடன் உறவு: பிரபல பாலிவுட் கவர்ச்சி கன்னியும் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்த நடிகையுமான பிபாஷா பாசுவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை சில ஆண்டுகள் செய்து வந்தார் ஜான் ஆபிரகாம். 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஸ்ம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், ஆரம்பித்த இவர்களின் உறவு 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சந்தோஷமாக இருந்தன. பாலிவுட்டின் சூப்பர் ஜோடி என்றே இவர்களை பலரும் அழைத்து வந்தனர். ஆனால், அதன் பின்னர் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜான் ஆபிரகாம் திருமணம்: 2003ம் ஆண்டு ஜிஸ்ம் படத்தில் அறிமுகமான ஜான் ஆபிரகாம் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஃபர்ஹான் எனும் இயற்பெயர் கொண்ட ஜான் ஆபிரகாம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய நிலையில், தனது பெயரை ஜான் ஆபிரகாம் என மாற்றிக் கொண்டார். 2014ம் ஆண்டு பிரியா ரூஞ்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். குழந்தைகளை பெற்றுக் கொள்ளாமல் சந்தோஷமாக இருவரும் 9 ஆண்டுகளை கடந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிரம்மாண்ட பங்களா: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கடந்த ஆண்டு ஷாருக்கானின் பதான் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். 30 கோடி ரூபாய் வரை அவருக்கு அந்த படத்திற்காக சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் மும்பையின் முக்கிய நகரான Khar Linking Road எனும் இடத்தில் உள்ள நிர்மல் புவன் எனும் பங்களாவை வாங்கி உள்ளார். 13,138 சதுர அடியில் 2 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட பங்களா பிரவீன் நாத்தலால் ஷா என்பவருக்கு சொந்தமாக இருந்த நிலையில், கடந்த டிசம்பர் 27ம் தேதி தான் ஜான் ஆபிரகாம் பெயருக்கு ரெஜிஸ்டர் செய்து தரப்பட்டு இருக்கிறது.
75 கோடி ரூபாய்: இந்த பிரம்மாண்ட சொகுசு பங்களாவின் விலை மட்டும் 75 கோடி ரூபாயாம். 70.83 கோடி ரூபாயை அந்த பங்களாவின் ஓனருக்கு வழங்கிய ஜான் ஆபிரகாம் 4.25 கோடிக்கு ஸ்டாம்ப் டியூட்டி கட்டியுள்ளாராம். புத்தாண்டை முன்னிட்டு தனது மனைவிக்கு ஸ்பெஷல் கிஃப்ட்டாக இந்த பங்களாவை வாங்கிக் கொடுத்திருக்கிறாராம் ஜான் ஆபிரகாம்.


Click it and Unblock the Notifications











