twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பப்ளிசிட்டி முக்கியமில்லை.. கொரோனாவுக்கு நிதியளித்த பாலிவுட் நடிகர்.. ஆனா வெளியே சொல்லல!

    |

    மும்பை: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிபடுவோருக்கு நிதியளித்துள்ளார்.

    ஆனால், எவ்வளவு கொடுத்தார், யாருக்கு அளித்தார் என்ற எந்தவொரு தகவலையும் வெளியிட அவர் விரும்பவில்லை.

    https://tamil.filmibeat.com/news/john-abraham-doesn-t-want-to-make-his-coronavirus-donations-public-here-why-070163.html

    கொரோனா நிவாரண நிதிக்காக பாலிவுட்டில் அதிகபட்சமாக நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடிகளையும், மும்பை மாநகராட்சிக்கு 3 கோடிகளையும் வழங்கி உள்ளார்.

    ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் கொரோனாவை எதிர்த்து போரடி வரும் அரசுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா வைரஸுக்காக நிவாரணம் அளித்துள்ள நடிகர் ஜான் ஆபிரகாம், அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் மாபெரும் தொகையை கொரோனா நிதியாக அளித்த நடிகர் அக்‌ஷய் குமாரை பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹா மறைமுகமாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வளவு நிதி அளித்தேன் என்பதை கூற நடிகர் ஜான் ஆபிரகாம் மறுத்துள்ளார்.

    இந்த அழகு தெய்வத்தின் அப்பா அம்மாவா இது.. நடிகைக்கு டன் கணக்கில் ஐஸ் வைக்கும் ஃபேன்ஸ்!! இந்த அழகு தெய்வத்தின் அப்பா அம்மாவா இது.. நடிகைக்கு டன் கணக்கில் ஐஸ் வைக்கும் ஃபேன்ஸ்!!

    உதவி செய்வது அனைவரது கடமை, அதை சிலர் வெளிப்படுத்தி, பலரையும் ஊக்குவித்து உள்ளனர். ஆனால், தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. தான் செய்யும் உதவி மக்களை சென்றடைந்தால் போதுமானது எனக் கூறியுள்ளார்.

    மேலும், நாட்டு மக்கள் உண்மையான வீரர்களையும், சூப்பர் ஹீரோக்களையும் இந்த கொரோனா வைரஸ் பரவலால் கண்டிருக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பாய்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தான் இந்த நேரத்தின் ரியல் சூப்பர் ஹீரோக்கள் என்றும் அவர்களை பாராட்டியுள்ளார்.

    English summary
    Unlike his peers in Bollywood, John Abraham has not disclosed the amount he has donated for coronavirus relief.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X