என்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்!

By

சென்னை: தமிழக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ்-வை இந்தி தயாரிப்பாளர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தமிழக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்புமணி - அறிவுமணி. இவர்கள் அன்பறிவ் என்ற பெயரில் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகின்றனர்.

John Abraham teams up stunt choreographers ‘Anbariv’ for the first time

ரஜினியின் கபாலி, காலா, மெட்ராஸ், சிங்கம் 3, கே.ஜி.எப், கைதி உட்பட பல படங்களுக்கு இவர்கள் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.

கேஜிஎஃப் படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது இந்தியில் உருவாகும், மும்பை சாகா என்ற படத்துக்கு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றனர்.

இதில் ஜான் ஆபிரகாம், இம்ரான் ஹாஸ்மி, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, மகேஷ் மஞ்சரேக்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை புகழ்ந்துள்ள, தயாரிப்பாளர் சஞ்சய் குப்தா, கேஜிஎஃப் படத்தைப் பார்த்து அன்பறிவ்-வை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். அவர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள். திறமையான இளம் சண்டை இயக்குனர்கள். அவர்களின் ஆக்‌ஷனில் வேகம் இருக்கிறது.

படத்தில் சண்டைக்காட்சிகள் மிரட்டலாக இருக்கும். பைக் சேசிங் காட்சிகளும் துப்பாக்கிச் சண்டைகளும் இருக்கின்றன. பல கேமராக்களை வைத்து, ஸ்டைலிஷாக இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

காட்சியின்போது ஹீரோ ஜான் ஆபிரகாமுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் நடித்தார்' என்று கூறியுள்ளார் சஞ்சய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X