இந்தியில் அஜித்தின் அதகள வேதாளம்... இவர்தான் ஹீரோ... தயாரிப்பு உறுதி... ஆலுமா டோலுமா உண்டா பாஸ்?
மும்பை: அஜித்தின் வேதாளம் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ யார் என்பதை உறுதி செய்துள்ளது பட நிறுவனம்
அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் வேதாளம். இதில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, அப்புக்குட்டி உட்பட பலர் நடித்திருந்தனர்.
வெற்றி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

ஆலுமா டோலுமா
இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் செம ஹிட்டானது. இந்தப் படம் பெங்காலியில் சுல்தான் என்ற பெயரில் கடந்த ஆண்டு ரீமேக் ஆனது. இதன் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பதாகக் கூறப்பட்டது.

அஜித் கேரக்டரில்
அவர் அரசியலில் ஈடுபட்டதால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், இது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதன் ரீமேக்கில், அஜித் நடித்த கேரக்டரில் நடிக்க ஜான் ஆபிரஹாமிடம் பேசி வந்தனர்.

ரோகித் தவான்
அவர் நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. இப்போது அதை உறுதி செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான டிசீரிஸ். ரோகித் தவான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர் தேஸி பாய்ஸ், டிஷூம் படங்களை இயக்கியவர்.

மே, ஜூனில்
அடுத்த வருடம் மே, ஜூன் மாதங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு இனிதான் நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











