இந்திக்கும் போகுது ‘அய்யப்பனும் கோஷியும்’.. அங்க இந்த பிரபல ஹீரோ தான் தயாரிச்சு நடிக்கப் போறாராம்!

மும்பை: பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'அய்யப்பனும் கோஷியும்' பாலிவுட்டில் ரீமேக் ஆகப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Aadujeevitham Team is Back | Prithviraj Sukumaran, SupriyaMenon, Daughter, Mother • Jordan

மலையாள இயக்குநர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்த படம் 'அய்யப்பனும் கோஷியும்'.

இந்த படத்தை தமிழ் மொழியில் ரீமேக் செய்யப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

என்ன கதை

என்ன கதை

ஒரு ரிட்டயர்டு மிலிட்ரி மேனுக்கும், ரிட்டயர்ட் ஆகப் போகும் போலீஸ் அதிகாரிக்கும் நடுவே நடக்கும் ஈகோ சண்டை தான் ‘அய்யப்பனும் கோஷியும்'. இந்த கதையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பதே தெரியாது. இருவரும் ஹீரோக்கள் தான், இருவரும் வில்லன்கள் தான். கேட் அண்ட் மவுஸ் கதையை அவ்வளவு யதார்த்தமாக உருவாக்கியதே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.

தமிழ் ரீமேக்

தமிழ் ரீமேக்

மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்' படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிஜு மேனன் நடித்த அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் சசி குமாரும், பிருத்விராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

அய்யப்பனும் கோஷியும் படத்தை அப்படியே பார்த்தாலே தெளிவாக புரிகிறதே, இந்த படத்தை எதற்கு தமிழில் ரீமேக் பண்ணிக்கிட்டு என்று சிலரும், வேற நல்ல காஸ்டிங்கே கிடைக்கலையா, சசிகுமாரும், ஆர்யாவும் கொஞ்சம் கூட செட் ஆக மாட்டாங்க என ஏகப்பட்ட ட்ரோல் மற்றும் மீம்கள் குவிந்து வருகின்றன.

இந்தியில்

இந்தியில்

இந்நிலையில், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். ஜான் ஆபிரகாமின் தயாரிப்பு நிறுவனமான JA எண்டர்டெயின்மென்ட் இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. மேலும், கோஷி கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாமே நடிக்க உள்ளாராம்.

பல படங்கள்

பல படங்கள்

பாலிவுட்டின் கவர்ச்சி கண்ணன் ஜான் ஆபிரகாம் இதுவரை ஆயுஷ்மான் குரானா அறிமுகமான விக்கி டோனர், மெட்ராஸ் கஃபே, ராக்கி ஹேண்ட்ஸம், ஃபோர்ஸ் 2, பர்மானு: தி ஸ்டோரி ஆஃப் போக்ரான், பாட்லா ஹவுஸ் உள்ளிட்ட பல படங்களை தனது பேனர் கீழ் தயாரித்தும் நடித்தும் இருக்கிறார்.

லாக்டவுனுக்கு பிறகு

லாக்டவுனுக்கு பிறகு

நாடு முழுவதும் லாக்டவுன் நீக்கப்பட்டு விரைவிலேயே பாலிவுட் சினிமா உலகம் முன்பு போல முந்தி வரும் என்றும், எங்க ரசிகர்களுக்கு நல்ல தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில், அற்புதமான இந்த கதையை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக, லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில்

அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில்

சிறை தண்டனைக்குப் பிறகு பிசியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்திற்கு பாலிவுட்டில் கச்சிதமாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லன் ஆதிராவாக மிரட்ட உள்ள சஞ்சய் தத், இந்த படத்தில் இணைவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X