கலிபோர்னியா காட்டுத்தீ.. 5 லட்சம் டாலர்கள் நன்கொடை அளித்த ஜான் சினா!

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 5 நாட்களாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

அந்த காட்டுத்தீயின் கோர பசிக்கு இதுவரை 30 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மற்றும் விலையுயர்ந்த ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகள் தீக்கிரையாகி வருகின்றன.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, உள்பட பலரும் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ

காட்டுத்தீ

கலிபோர்னியாவில் அடிக்கடி இதுபோன்ற காட்டுத்தீ பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தொடங்கிய காட்டுத்தீயை இதுவரை கட்டுப்படுத்த முடியாமல், தீயணைப்பு வீரர்களும், அரசும் போராடி வருகிறது. தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையை அறிந்த அம்மாநில கவர்னர் கவின் நியூசம், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அர்னால்டு

அர்னால்டு

டெர்மினேட்டர் படங்களின் மூலம் உலக பிரபலமான ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களை நள்ளிரவு நேரங்களிலேயே, அவசர அவசரமாக தீயணைப்பு வீரர்கள் வீட்டை விட்டு காலி செய்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். தீயணைப்பு வீரர்களின் அந்த வீரச்செயலை அர்னால்டு பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

5 லட்சம் டாலர்கள்

கலிபோர்னியா காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடி வரும் தீயணைப்பு வீரர்களை ரியல் ஹீரோக்கள் என ஹாலிவுட் நடிகரும் WWE சாம்பியனுமான ஜான் சினா புகழ்ந்துள்ளார். மேலும், தீயணைப்பு துறை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை தீயணைப்பு துறைக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய ஜான் சினா, வீரர்களை வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாராட்டுவது எந்த வகையில் சரியான செயலாகும் என தனக்குள்ளே கேட்டுக் கொண்டதாகவும், அவர்களுக்கு நிச்சயம் இந்த தொகை உதவும் என்று நினைத்ததால், அதனை நன்கொடையாக அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இவரும் தீயணைப்பு வீரர்தான்

ஹாலிவுட் நடிகர் ஜான் சினா நடிப்பில் வரும் நவம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் Playing with Fire எனும் ஹாலிவுட் படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஜான் சினா ஒரு தீயணைப்பு வீரராக நடித்துள்ளார். தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் மற்றும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை குறித்து படப்பிடிப்பின் போது நன்கு உணர்ந்து கொண்ட ஜான் சினா, கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X