John Cena: முழு நிர்வாணமாக வந்தாரா ஜான் சீனா?.. உண்மை என்ன தெரியுமா?.. லீக்கான ஆஸ்கர் ரகசியம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 96வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி இருந்தால், இரண்டு இடங்களையும் எதை வைத்து மறைத்துக் கொண்டு வருவார்கள் என்றும் ஆண்களின் நிர்வாணம் ஒன்றும் விருது விழாவுக்கான கேளிக்கை பொருள் அல்ல என ஏகப்பட்ட பிரபலங்களே ஆஸ்கர் விருது விழா கமிட்டிக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

John Cena wears skin colour inner wear while announcing Oscar Award secret leaked

இந்நிலையில், ஜான் சீனா ஆடை அணியாமல் வரவில்லை என்றும் நேக்கட் கலர் உள்ளாடை அணிந்தே வந்திருக்கிறார் என்கிற ரகசியம் புகைப்படமாகவே கசிந்து ரசிகர்களை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

காஸ்ட்யூம் விருதுக்கு காஸ்ட்யூமே இல்லாமல்: யர்கோஸ் லந்திமோஸ் இயக்கத்தில் எம்மா ஸ்டோன் நடித்து வெளியான 'புவர் திங்ஸ்' திரைப்படம் ஓபன்ஹெய்மர் படத்தை தொடர்ந்து அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்கப், சிறந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஆஸ்கர் விருதுகளை அந்த படம் வென்றது. Poor Things படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க வித்தியாசமா பண்றேன் என்கிற பெயரில் ஜான் சீனா ஆடை அணியாமல் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மார்கட் ராபி ரியாக்‌ஷன்: பார்பி படத்தின் ஹீரோயின் மார்கட் ராபி உள்ளிட்ட ஹாலிவுட் நடிகைகள் எல்லாமே ஜான் சீனாவை ஆடையே இல்லாமல் அப்படி பார்த்தவுடன் ஆடிப்போய் வயிறு குலுங்க சிரித்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ரசிகர்கள் விளாசல்: உலகளவில் ஜான் சீனாவை வைத்து அகாடமி விருதுகள் குழு இவ்வளவு சீப்பான ஸ்டன்ட்டை ஆஸ்கர் விருது விழாவில் பண்ண வேண்டுமா? தப்பித்தவறி அந்த கார்டு விலகியிருந்தால் அவருடை முக்கிய உறுப்பு ஃபிளாஷ் ஆகியிருந்தால் கெஸ் ஆகியிருக்குமே என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

John Cena wears skin colour inner wear while announcing Oscar Award secret leaked

ஜட்டியுடன் ஜான் சீனா: ஆனால், உள்ளாடை அணியாமல் ஒன்றும் ஜான் சீனா ஆஸ்கர் மேடையில் ஏறவில்லை என்றும் நேக்கட் ஸ்கின் கலர் உள்ளாடையை அணிந்துக் கொண்டு கிட்டத்தட்ட நம்ம ஊர் கோவணம் போன்ற உடையை அணிந்துக் கொண்டு தான் ஆஸ்கர் மேடையில் அப்படியொரு ஆக்டிங்கை ஜான் சீனா கொடுத்துள்ளார் என்றும் இதோ பிஹைண்ட் தி சீன் போட்டோ என ஜட்டியுடன் ஜான் சீனா இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி ஆஸ்கர் ரகசியத்தை அம்பலமாக்கி விட்டது.

More from Filmibeat

https://tamil.oneindia.com/photos/oscars-2024-award-winners-list-oi114688.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X