அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு ஸ்டைலா! மாஸா! கெத்தா வந்து இறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஆண்டில் இருந்தே திட்டங்கள் தீட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடைபெற்று வருகின்றது.

இன்று நடைபெறும் திருமண விழா தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்தபடி உள்ளது. மகாராஸ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டர் இந்த திருமணம் நடைபெறுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் தனது இளைய மகனின் திருமணத்தினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் பல லட்சக்கணக்கான கோடிகளை அம்பானி செலவழித்து வருகின்றார். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு சென்றுள்ளது.

ஷாருக்கான்: இதனால் சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்- வீராங்கனைகள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா திரும்பிக் கொண்டு உள்ளனர். குறிப்பாக ஷாருக்கான் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருந்த தனது படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு வந்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் செட்டில் ஆகி, தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்த பிரியங்கா சோப்ராவும் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவருடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ளார்.

ஜான் சீனா: இவர்கள் மட்டும் இல்லாமல் தென்னிந்திய திரைப்பிரபலங்கள் யாஷ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். திருமண விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகின்றது.

Anant Ambani Radhika Merchant Rajini Kanth Yash Atlee

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக, முதலில் தனது குடும்பத்தினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அதன் பின்னர் நிரூபர்கள் தனியாக போஸ் கொடுக்கும்படி கேட்க, சிரித்த முகத்துடன் ஸ்டைலாகவும் மாஸாகவும் நின்று போஸ் கொடுத்து அசத்தினார். குறிப்பாக வேட்டி சட்டையில் மாஸாக வந்திருந்த சூப்பர் ஸ்டார் படையப்பா படத்தில் வரும் வசனத்தைப் போல, வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல" என்பது சரி என்பதைப் போலவே நடந்து கொண்டார்.

Anant Ambani Radhika Merchant Rajini Kanth Yash Atlee

இசைப்புயல்: மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி உடன் கூலாக கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X