சார்பட்டா பரம்பரையில் வேம்புலியாக மிரட்டிய ஜான் கோக்கென்.. குவியும் பாராட்டு.. யார் தெரியுமா?

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக வந்து மிரட்டிய ஜான் கோக்கெனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Recommended Video

Sarpatta shootingல Ranjith இப்படி தான் இருப்பாரு | Vembhuli, Vetri, Raman

பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கென். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார்.

பாகுபலி தி பிகினிங் படத்திலும் நடித்துள்ளார் ஜான் கோக்கென். இதேபோல் கேஜிஎஃப் படத்திலும் நடித்திருக்கிறார்.

வேம்புலி கதாப்பாத்திரம்

வேம்புலி கதாப்பாத்திரம்

தற்போது அமேஸான் பிரைம்மில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் சார்பட்டா பரம்பரை படத்திலும் நடித்துள்ளார் ஜான் கோக்கென். இந்தப் படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் முரட்டு மீசையுடன் மிரட்டியிருக்கிறார் ஜான் கோக்கேன்.

மிரட்டல் நடிப்பு

மிரட்டல் நடிப்பு

ஜான் கோக்கெனின் மிரட்டல் நடிப்பை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். 40 வயதான ஜான் கோக்கென் 2012ஆம் ஆண்டு பிரபல நடிகையான மீரா வாசுதேவனை திருமணம் செய்தார்.

தமிழ் மலையாள படங்கள்

தமிழ் மலையாள படங்கள்

நடிகை மீரா வாசுதேவன் தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மத்ரா என்ற படத்தில் நடித்தார்.

2016ல் விவாகரத்து

2016ல் விவாகரத்து

மீரா வாசுதேவனின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதனால் ஜான் கோக்கெனை இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

பூஜாவுடன் திருமணம்

பூஜாவுடன் திருமணம்

இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ஜான் கோக்கென் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகையும் தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

மிகப் பெரிய வாய்ப்பு

மிகப் பெரிய வாய்ப்பு

தற்போது வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சார்பட்டா பரம்பரை படம் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என நெகிழ்ந்து வரும் ஜான் கோக்கென், இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X