FDFSனா இதுதான்பா.. மனைவியுடன் வலிமை படத்தை பார்த்த வேம்புலி.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்களும் நடிகர் அஜித்தின் வலிமை படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்து விட வேண்டும் என காலையிலேயே கார் எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் சென்று படத்தை பார்த்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

Valimai Movie FDFS Audience Opinion | Ajithkumar | H Vinoth | Valimai | Filmibeat Tamil

ரசிகர்களுடன் வலிமை படத்தை வலிமை படக்குழுவினர் பார்த்த நிலையில், நடிகர் அருண் விஜய், சார்பாட்டா படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வலிமை படத்தை பார்த்து விட்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

தனது மனைவி பூஜா ராமசந்திரனுடன் வலிமை படத்தை பார்த்த அனுபவத்தை வீடியோவாக ஷேர் செய்துள்ளார் ஜான் கொக்கன்.

அஜித் ரசிகர்

அஜித் ரசிகர்

நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் சாதாரண அடியாளாக நடித்த தனக்கு அஜித் சார் கொடுத்த அட்வைஸ் மறக்க முடியாது என்றும் தான் ஒரு தீவிரமான அஜித் ரசிகர் என்றும் சார்பாட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த நடிகர் ஜான் கொக்கன் சமூக வலைதளங்களிலும் தனது பேட்டிகளிலும் குறிப்பிட்டு இருந்தார்.

மனைவியுடன் FDFS

மனைவியுடன் FDFS

இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாலை காட்சியை தனது மனைவியும் நடிகையுமான பூஜா ராமசந்திரன் உடன் இணைந்து காரில் வந்து பார்த்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஜான் கொக்கன் ஷேர் செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

வாணவேடிக்கை

வாணவேடிக்கை

காரில் ஜான் கொக்கன் மற்றும் பூஜா ராமசந்திரன் வரும் வழியெங்கும் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து வலிமை FDFSஐ கொண்டாடி வருவதை வீடியோ எடுத்து வெளியிட்டு, வலிமை FDFS கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பாருங்க மக்களே என ஷேர் செய்துள்ளார். மேலும், தியேட்டரில் அலைமோதும் கூட்டத்துடன் அவரும் உள்ளே சென்று படத்தை பார்த்து கொண்டாடி உள்ளார்.

படத்தை பற்றி

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தோம். ஹாலிவுட் ஸ்டைல் ஆக்‌ஷனில் மிரட்டும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகி உள்ளது அஜித் குமாரின் வலிமை என தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார் நடிகர் ஜான் கொக்கன். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த இவர், அடுத்ததாக ஹன்சிகாவின் ரவுடி பேபி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X