ஜான் கொக்கன் முதல் ஆதிக் வரை.. விவாகரத்தானவர்களுடன் திருமணம் செய்துக் கொண்ட வில்லன் நடிகர்கள்!
சென்னை: சினிமா பிரபலங்களே பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து வரும் நிலையில், விவாகரத்தானவர்களை வில்லன் நடிகர்கள் விரும்பி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை கொடுத்து வரும் சூழலும் உருவாகி வருகிறது.
முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்றால் அதற்கு மேல் திருமணம் செய்துக் கொண்டு வாழக் கூடாது என எந்தவொரு சட்டத்திலும் சொல்லவில்லை.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை விவாகரத்தான பிரபலங்களை வில்லன் நடிகர்கள் திருமணம் செய்துக் கொண்ட ஒரு சின்ன அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..
நவாப் ஷா - தர்பார் வில்லன்: பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், அரண், சீமராஜா, தர்பார் மற்றும் சுல்தான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கானுக்கே வில்லனாக நடித்த இவர் ஆசை, கண்டுகொண்டே கண்டுகொண்டேன் படங்களில் நடித்த பூஜா பத்ராவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். சோனு அலுவாலியாவை விவாகரத்து செய்து தனிமையில் வாடி வந்த பூஜா பத்ராவை விரும்பி திருமணம் செய்துக் கொண்டார் நவாப் ஷா.

ஜான் கொக்கன் - துணிவு வில்லன்: பாகுபலி, கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் அடியாள் போல நடித்து வந்த ஜான் கொக்கன் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாகவும் துணிவு படத்தில் மெயின் வில்லனாகவும் நடித்து மாஸ் காட்டினார். எஸ்எஸ் மியூசிக் விஜேவாக இருந்த பூஜா ராமசந்திரன் கிரேய்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணம் சீக்கிரமே கசந்து விட்ட நிலையில், வில்லன் நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்துக் கொண்டு சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகி செம ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் - நேர்கொண்ட பார்வை: சமீபத்தில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்துக் கொண்டார். இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வில்லனாக நடித்திருப்பார். பிரபுவின் சகோதரி மகனான குனால் என்பவரை தான் ஐஸ்வர்யா முதலில் திருமணம் செய்துக் கொண்டார். அமெரிக்காவில் படித்து விட்டு வேலை பார்த்து வந்தவருடன் திருமணம் செய்த ஐஸ்வர்யா பிரபு அந்த திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2018ல் விவாகரத்து செய்து பிரிந்தார். 5 ஆண்டுகள் கழித்து ஆதிக் ரவிச்சந்திரன் ஐஸ்வர்யா பிரபுவை திருமணம் செய்து கொண்டார். பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல வில்லன் நடிகர்கள் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சிலர் விவாகரத்தான பெண்களுக்கு இதுபோல் வாழ்க்கை கொடுத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











