விஜய்யின் சச்சின் 2 ஆம் பாகம் வாய்ப்பிருக்கிறாதா..? என்ன சொல்கிறார் இயக்குனர் ஜான் மகேந்திரன்?

By

சென்னை: விஜய் நடித்து வெளியான சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

1990 TO 2020 THALAPATHY HIT MOVIES | ASHWIN ANALYSE |THALAPATHY BIRTHDAY SPECIAL |FILMIBEAT TAMIL

பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். இவர் விஜய் சச்சின் படத்தை இயக்கினார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருப்பார்.

நடிகை பிபாஷா பாசு

நடிகை பிபாஷா பாசு

அவர் ஜோடியாக ஜெனிலியாக நடித்திருந்தார். வடிவேலு, தாடி பாலாஜி உட்பட பலர் காமெடி ஏரியாவை கவனித்தனர். இன்றளவும் அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் பேசப்படுகிறது. ரகுவரன் உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகை பிபாஷா பாசு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்த, இதன் பாடல்கள் அப்போது வரவேற்பை பெற்றன.

இரண்டாம் பாகங்கள்

இரண்டாம் பாகங்கள்

கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இந்தப் படம் தெலுங்கில் சச்சின் என்ற பெயரிலும் இந்தியில் கமாண்டி என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டன. விஜய் ரசிகர்கள் இப்போதும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் பற்றி பேசிவருகின்றனர். இதற்கிடையே, பல படங்களின் இரண்டாம் பாகங்கள், தயாரிப்பு லிஸ்டில் இருக்கின்றன. 15 வருடம் கழித்து சச்சின் படத்தின் 2 ஆம் பாகமும் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

விரும்புகிறார்கள்

விரும்புகிறார்கள்

அதனால், இதன் அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'அந்தப் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். கண்டிப்பாக அப்படியொரு படத்தில் நடிகர் விஜய்யை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நன்றாக இருக்கும்

நன்றாக இருக்கும்

விஜய், எமோஷனலாக நடிக்கும் படத்தைப் பார்க்க விரும்புகிறேன். அப்படியொரு படத்தை நான் இயக்கினாலும் சரி, வேறு இயக்குனர் இயக்கினாலும் சரி, முதல் ஆளாக தியேட்டரில் போய் பார்ப்பேன். அது நடந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு ஜான் மகேந்திரன் கூறியுள்ளார். இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய், அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X