John Wick 4 Box Office: அடேங்கப்பா.. கீயானு ரீவ்ஸின் ஜான் விக் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோவான கீயானு ரீவ்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஜான் விக் 4ம் பாகம் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வாரம் தமிழில் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், ஜான் விக் 4 திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் வெளியான முதல் நாளிலேயே ஜான் விக் திரைப்படம் பல கோடி ரூபாய்களை வசூல் வேட்டையாடி உள்ளது. ஜான் விக்கின் க்ளோபல் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் இந்தியாவில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

ஜான் விக் 4
ஜான் விக் 4 திரைப்படம் கடந்த 3 பாகங்களை போலவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கதை, லாஜிக் எல்லாம் தாண்டி ஜான் விக் படத்திற்கே உரித்தான ஆக்ஷன் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்திலும் கொஞ்சம் கூட குறையாமல் ரசிகர்களை தியேட்டரில் கொண்டாட வைத்துள்ளது. கீயானு ரீவ்ஸ் அடிக்கிற ஒவ்வொரு அடியும் அடி வாங்குற ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இருக்கு என ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகி உள்ளனர்.

இந்தியாவில் சுமார் தான்
ஜான் விக் படங்களுக்கு இந்தியாவில் பெருமளவில் ரசிகர்கள் இல்லை. ஹாலிவுட் படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர் வட்டமே இந்த படத்துக்கும் தங்களது ஆதரவை அளித்துள்ளன. சமீபத்தில் வெளியான மார்வெல் படங்களே சொதப்பிய நிலையில், ஜான் விக் 4 படம் முதல் நாளில் 2.5 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 8 கோடியாவது வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வசூல் ரொம்பவே சுமார் தான்.

வீக்கெண்டில் அதிகரிக்கும்
ஜான் விக் 4 படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் மவுத் டாக்ஸ் மூலமாக சனி மற்றும் ஞாயிறுகளில் நல்ல வசூலை கீயானு ரீவ்ஸ் படம் இங்கேயும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எப்போதும் போல தனது ஹோம் கிரவுண்ட் ஆன ஓவர்சீஸ் மற்றும் டொமஸ்டிக் பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிட்டு இருக்கிறது ஜான்விக் 4.

250 கோடி வசூல்
கீயானு ரீவ்ஸ், டோனி யென் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் 30 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வார முடிவில் 70 மில்லியன் டாலர் வரை இந்த படம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











