இறுதிக்கட்டத்தில் துருவ நட்சத்திரம்... John Will Meet You Soon கேப்ஷனுடன் வந்த அல்டிமேட் அப்டேட்

சென்னை: சியான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக அவர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகாமல் கிடப்பில் கிடந்தது.

விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ரிது வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து அல்டிமேட்டான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம்

தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம்

சீயான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அவர் நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. கடந்தாண்டு விக்ரம் நடிப்பில் வெளியான மூன்று படங்களில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் மட்டுமே அவருக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது. நேரடியாக அமேசானில் வெளியான மகான், திரையரங்குகளில் ரிலீஸான கோப்ரா திரைப்படங்களுக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.

 இறுதிக்கட்டத்தில் துருவ நட்சத்திரம்

இறுதிக்கட்டத்தில் துருவ நட்சத்திரம்

இந்நிலையில், தங்கலானில் நடித்த முடித்த பின்னரே விக்ரமின் அடுத்தப் படம் குறித்து அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே விக்ரம் நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டரை 'ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்' ( John will meet you soon ) என்ற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், அதில் ஃபைனல் ஸ்டேஜ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ட்ரெண்டிங்கில் துருவ நட்சத்திரம்

ட்ரெண்டிங்கில் துருவ நட்சத்திரம்

இதனால் விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜான் என்ற ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். இந்நிலையில், அப்டேட் வெளியானதில் இருந்து, டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது துருவ நட்சத்திரம்.

 சூர்யா - தீபிகா படுகோன்

சூர்யா - தீபிகா படுகோன்

துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா - தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக 2013ம் ஆண்டிலேயே அப்டேட் கொடுத்தார் கெளதம் மேனன். ஆனால், அதன் பின்னர் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் உருவானது. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தான் நடந்தது. அமெரிக்க ஸ்பையாக விக்ரம் நடித்துள்ளதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திடீரென இந்தப் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக்கொண்டே சென்றது. முக்கியமாக கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மேஜிக்கை திரையரங்குகளில் ரசிக்க ரசிகர்கள் அதிக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X