பெயரை கெடுக்கிறார்: ரூ. 355 கோடி கேட்டு முன்னாள் மனைவி மீது நடிகர் வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: தன்னை பற்றி அவதூறு பரப்பிய முன்னாள் மனைவியிடம் ரூ. 355 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹெர்ட் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி தி வாஷிங்டன் போஸ்ட்டுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டி தொடர்பாக ஜானி டெப் ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நஷ்டஈடு
தன்னை பற்றி பொய் புகார் தெரிவித்த ஆம்பர் ஹெர்டிடம் ரூ. 355 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜானி டெப். கடன் பிரச்சனையில் இருக்கும் டெப் இந்த வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜானி டெப்
ஜானி டெப் ஆம்பர் ஹெர்டை துன்புறுத்தியதே இல்லை. டெப் மீது ஹெர்ட் கடந்த 2016ம் ஆண்டு கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்.
ஹெர்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் ஏற்படவும், அவரின் கெரியர் பிக்கப் ஆகவும் டெப் மீது இப்படி ஒரு புகாரை தெரிவித்துள்ளார் என்று ஜானி டெப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மோசம்
ஆம்பர் ஹெர்டை அமைதியாக இருக்கச் செய்யவே டெப் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். ஹெர்ட் அமைதி காக்க மாட்டார். டெப்பால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது அவரின் செயலில் இருந்து தெரிகிறது என்று ஹெர்டின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

திருமணம்
ஜானி டெப்(55), ஆம்பர் ஹெர்ட்(32) ஆகியோர் 2011ம் ஆண்டு தி ரம் டைரி படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்து 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2016ம் ஆண்டு மே மாதம் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











