TVKவுல சேருங்க சூர்யா.. திருச்சி கிழக்கு உங்களுக்குத்தான்.. விஜய் ரசிகர்கள் போஸ்ட்
சென்னை: ஒரு பக்கம் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது என்றால் மறுபுறம் திரை உலகம் அதை விட பரபரப்பாக இயங்கி வருகிறது. மொத்த திரையுலகமும் சூர்யாவின் கருப்பு படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் படம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் சூர்யாவை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொள்ளச் சொல்லி இணையவாசிகளும் விஜய் ரசிகர்கள் சிலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நடிகர் சூர்யா என இருவரும் நீண்ட கால நண்பர்கள். இருவரும் இணைந்து நேருக்கு நேர், பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் கருப்பு படம் வெளியாகிறது, அதற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வேண்டும் என்று படக்குழு தரப்பில் கேட்டதுமே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, அனுமதி அளித்தது, அதாவது நள்ளிரவு 2 மணி வரை படத்தை திரையிட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது.

கண்ணீர் வீடியோ: இப்படி இருக்கையில் கருப்பு படக்குழுவினர் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, பதிவெல்லாம் போட்டனர். இணையத்தில் விஜய் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் மாறி மாறி அன்பைப் பகிர்ந்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றது. இப்படி இருக்கையில் கருப்பு படம் படக்குழு அறிவித்தது போல, 14ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகவில்லை. படத்தின் தயாரிப்பாளரும் ரசிகர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டு நள்ளிரவே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இயக்குநர் ஆர்ஜே பாலாஜி படம் வெளியாகும் என்ற நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், தற்போது அழுது கொண்டே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் படம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு வாங்க: அப்படி இருக்கையில் விஜய் ரசிகர்களும் இணையவாசிகளும் சிலர், சூர்யா சார் நீங்க முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள், திருச்சி கிழக்கில் நீங்கள் தான் வேட்பாளர் என்று எல்லாம் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவின் பதிவுக்கு, " பிரபு பிரதர், கருப்பு படம் மொத்த படக்குழுவினரின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் படமாக இருக்கும். கடுமையான முயற்சிகள் எப்போதும் தோற்பது இல்லை. கடந்த 10 நாட்களில் நடைபெற்ற சில கசப்பான அனுபங்களை மறந்துவிடுங்கள். நாங்கள் அனைவரும் கருப்பு படத்தை திரையரங்கில் கொண்டாட எங்களது சக்தியை சேமித்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். சூர்யா பிரதர் படம் பட்டையைக் கிளப்ப போவது உறுதி" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவும் பலரது கவனத்தை ஈத்துள்ளது.


Click it and Unblock the Notifications