Antony Teaser - ஆண்டனி ஒரு சாத்தான்.. பட்டையை கிளப்பும் ஜோஜு ஜார்ஜின் ஆண்டனி டீசர்

திருவனந்தபுரம்: Antony Teaser (ஆண்டனி டீசர்) ஜோஷியின் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன் நடிக்கும் 'ஆண்டனி' படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவருபவர் ஜோஜு ஜார்ஜ். அங்கு அவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். குறிப்பாக தன்னுடைய நடிப்பில் எந்த விதமான அலட்டலும் இல்லாமல் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் தனது முத்திரையை அழுத்தமாக இயல்பாக பதித்துவிடுவது அவருடைய பழக்கம். இதனால் அவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கப்பேர் இருக்கின்றனர். தமிழில் அவர் ஜகமே தந்திரம், பபூன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

 Joju George and Joshis Antony Teaser is Out Now

ஆண்டனி: இந்நிலையில் கேரள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜோஷி இயக்கத்தில் தற்போது ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். ஏற்கனவே இவர்கள் இருவரும் இ நைந்த பொரிஞ்சு மரியம் ஜோஸ் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனையடுத்து தற்போது உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறார். படத்துக்கான கதையை ராஜேஷ் வர்மா எழுத ஐன்ஸ்டின் சாக் பால் மற்றும் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

கல்யாணி ப்ரியதர்ஷன்: இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆண்டனி' படம் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ரத்த உறவுகளைவிட இதயத்திற்கு நெருக்கமான உறவுகளை பற்றி படம் பேசுகிறது. ஜோஷி இயக்கத்தில் முதன்முறையாக நடிப்பது பெருமை என கல்யாணி ப்ரியதர்ஷன் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் யார் யார்: இவர்களைத் தவிர விஜயராகவன், ஆஷா சரத், ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், பினு பப்பு, சுதிர் கரமனா, ஜூவல் மேரி, ஜிஜு ஜான், பத்மராஜ் ரதீஷ், ஆர்.ஜே.ஷன், ராஜேஷ் சர்மா, உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் களமிறங்கியிருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

 Joju George and Joshis Antony Teaser is Out Now

ஆண்டனி டீசர்: இந்நிலையில் ஆண்டனி படத்தின் அட்டகாச டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரின் ஆரம்பத்தில் சர்ச் காண்பிக்கப்பட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷன் பக்கம் நகர்கிறது. குறிப்பாக ஆண்டனி ஒரு சாத்தான் என்று சொல்லும் ஜோஜு ஜார்ஜின் எண்ட்ரி அட்டகாசமாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் டீசருக்கு பலத்த வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ரெனதீவ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிஜோய் இசையமைமைக்கிறார். கண்டிப்பாக இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் 'ஆண்டனி' படத்தின் முதன்மை இணை இயக்குநராக சிபி ஜோஸ் சாலிசேரியும், ஆக்சன் இயக்குநராக ராஜசேகர் பணிபுரிந்துள்ளனர். எடிட்டர் ஷியாம் சசிதரன் மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளர் ஆர்.ஜே.ஷான் உட்பட திறமையான கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X