லியோ பட நடிகருக்கு டபுள் ட்ரீட்..ஆண்டனி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?..வெளியானது அசத்தல் அப்டேட்
திருவனந்தபுரம்: Antony Teaser (ஆண்டனி டீசர்) லியோ படத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். இவர் மலையாள திரையுலகின் புகழ் பெற்ற இயக்குனர் ஜோஷி இயக்கிய 'ஆண்டனி' படத்தில் லீட் ரோல் செய்திருக்கிறார். படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் ஐன்ஸ்டின் சாக் பால், குமார் அகர்வால், நிதின் குமார் மற்றும் ரஜத் அகர்வால் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பு: ஆண்டனி படமானது உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜோஜு ஜார்ஜ் வித்தியாச கதைக்களங்களை தேர்ந்தெடுப்பவர் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
என்ன கதை: ஆண்டனி மற்றும் அவரது நண்பர்கள் சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அப்போதுஆண்டனி எதிர்பாராத விதமாக ஒரு கொலை செய்துவிடுகிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிகள் நிரம்ப சொல்லி இருக்கும் படம்தான் ஆண்டனி என கூறப்படுகிறது. இப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜ், "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஜோஷியுடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் முந்தைய படமான 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' எனக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், சினிமா வாழ்க்கையின் மைல்கல்லாகவும் அமைந்தது, 'ஆண்டனி' நிச்சயம் உங்களை ஏமாற்றாது" என்று கூறினார்.
கல்யாணி ப்ரியதர்ஷன்: அதேபோல் ஜோஷியின் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் படம் குறித்து பேசுகையில், "படத்தின் கதைக்களம் தனித்துவமானது, வழக்கத்திற்கு மாறானது. அதே நேரத்தில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்ச்சிகளால் நிரம்பியிருக்கிறது. பார்வையாளர்கள் என்னை இதுவரை படங்களில் பார்த்ததற்கு நேர்மாறாக இப்படத்தில் எனது கேரக்டர் இருக்கும்.
ஜோஷி சார், ஆண்டனி படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அவர் கதை சொல்லி முடித்தவுடன் இதைவிட த்ரில்லான ப்ராஜெக்ட்டை நான் கேட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அப்படிப்பட்ட அனுபவமுள்ள இயக்குநருடன் வழக்கத்திற்கு மாறான படமொன்றில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ரெனதீவ் கவனிக்கிறார். அதேபோல் ஜேக்ஸ் பிஜோயின் இசையமைக்கிறார். மேலும் எடிட்டிங்கை ஜோஷியே கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் டீசர் லியோ படம் வெளியாகும் நாளான அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
எப்போது ரிலீஸ்: ஆண்டனி படத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி ப்ரியதர்ஷன் தவிர்த்து செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படமானது நவம்பர் 23ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











