Antony Trailer - பட்டையை கிளப்பும் ஆண்டனி ட்ரெய்லர்.. கல்யாணி ப்ரியதர்ஷன் ஆக்‌ஷனில் மாஸ் காண்பிக்கிறாரே

திருவனந்தபுரம்: Antony Trailer (ஆண்டனி ட்ரெய்லர்) ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் ஜோஷி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் அவர் தற்போது மலையாளத்தில் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஜோஷி இயக்கியிருக்கிறார்.

Joju Georges Antony Trailer Was out Now

வெற்றி கூட்டணி: ஜோஷியும், ஜோஜு ஜார்ஜும் இணைந்து ஏற்கனவே பணியாற்றிய பொரிஞ்சு மரியம் ஜோஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதில், ஜோஜு ஜார்ஜுடன் கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா, ஆஷா சரத் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படம்: இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியிலும் ஜோஷியுடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர்: இந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையில் இந்தப் படம் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் படு மாஸாக இருக்கிறார். அதேபோல் கல்யாணி ப்ரியதர்ஷனோ ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் ட்ரெய்லரையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இப்படத்துக்கு ரெனதீவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். அதேபோல் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதனை ராஜசேகர் கவனித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் அவருக்கு அங்கீகாரத்தை பெற்று தரும் என்ற நம்பிக்கை ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

டிசம்பர் 1 ரிலீஸ்: ஆண்டனி படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரிக்க, ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜேஷ் வர்மா இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X