For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தேசிய விருது பெற்று என்ன பயன் அடுத்தவேளை சோற்றுக்கு கூட வழியில்லையே- சுந்தர் அய்யர்

  |

  சென்னை: தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ஜோக்கர் படத்தின் பின்னணிப் பாடகரான சுந்தர் அய்யர் தற்சமயம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகிறார். அவர் இசைக் கச்சேரி நடத்த தேவையான உதவிகளை வழங்குமாறு தன்னுடைய நண்பர்களுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  பொதுவாகவே கவிஞர்கள் என்றாலே அந்தக் காலம் முதல் நவீன காலம் வரையில், அன்றாட செலவுகளுக்கும் சாப்பாட்டுக்கும் திண்டாடவேண்டும் என்பது எழுதப்படாத விதிபோல். தேசிய கவிஞர் பாரதியார் தொடங்கி இன்றைய சினிமா கவிஞர்கள், பாடலாசிரியர்கள் வரை அது தொடர்கதையாகவே இருந்து வருவது காலத்தின் கோலம் தான்.

  Joker Film Singer Sundar ayyar need help from friends and public

  தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ஜோக்கர் படத்தில் ஐ லவ் யூ ஜாஸ்மினு என்ற பாடலைப் பாடியவர், ஸ்ரீதேவி நடித்த மாம் இந்திப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் படத்தில் இடம் பெற்ற புது மலரே என்ற பாடலை பாடியவர் தான் சுந்தர் அய்யர்.

  சுந்தர் அய்யர் தற்போது சென்னை பல்லாவரத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் குழந்தைகளின் படிப்பு செலவை வேல்ஸ் வித்யாஸ்ரம் ஏற்றுக்கொண்டது.

  என்னதான் தேசிய விருது பெற்ற படத்தில் பாடி இருந்தாலும் அதற்கு பின்பு சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு சான்ஸும் வரவில்லை. அன்றாட உணவாக கேழ்வரகு மாவை அரைத்து சாப்பிட்டு காலம் தள்ளுகிறார். இதனால் மிகவும் மனவேதனைப் பட்டு தன்னுடைய குடும்ப கஷ்டங்களை தன் நண்பரிகளிடம் பகிர்ந்துள்ளார்.

  அதைப் பார்த்த அவர்களின் நண்பர்களோ ஒரு கடிதம் எழுதுமாறு அட்வைஸ் செய்தார்கள். அவர்கள் சொன்னபடியே சுந்தர் அய்யர் எழுதிய கடிதத்தை அவருடைய நண்பர்கள் வாட்ஸ்அப்பில், ஊடக நண்பர்களுக்கு இதை பகிர்ந்து வருகின்றனர்.

  சுந்தராயர் எழுதிய கடிதத்தில்,

  அன்பான வணக்கம் நலமா, இனிமேல் சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பது என்பது சரியானதாக படவில்லை. வரும்போது பார்ப்போம். இப்போது வாழ்வதற்கான வழியை தேடினேன். ஒரே வழி இசை நிகழ்ச்சி செய்வது.

  சொந்தமாக ஒரு ஆடியோ செட் வாங்க வேண்டும். அதற்கான தொகைக்கு உங்களை தேடி வந்திருக்கேன், தருவீர்கள் என்ற அதீத நம்பிக்கையில். ஒரு வருடத்தில் திருப்பி கொடுத்து விடுவேன். முன்பு எனக்கு செய்த உதவி வேறு. இப்போது நீங்கள் செய்யும் உதவி வேறு.

  இப்போது நான் மீன் பிடிக்க தூண்டில் தான் கேட்கிறேன். நானும் வாழ்வேன். மற்றவர்களையும் வாழ வைப்பேன். நீங்களே பொருட்களை வாங்கி கொடுத்தாலும் சரி. எவ்வளவு ஆகுதோ அவ்வளவு பணமும் விரைவில் திருப்பி கொடுத்து விடுவேன். நீங்களோ உங்களுக்கு தெரிந்த நண்பர்களோ, உறவுகளோ உதவி செய்ய கேளுங்கள். யார் யார் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அவர் பெயரும் ஃபோன் நம்பரும் அனுப்புங்கள்.

  இப்போதே செய்தால் அடுத்த (ஆவணி) முகூர்த்ததிலே நம் நிகழ்ச்சியை தொடங்கி விடலாம். நம் நட்புகளுக்கு நிகழ்ச்சி செய்தாலே நிற்பதற்கு நேரம் இருக்காது. எல்லா பொருட்களும் சேர்த்து (ஆடியோ செட்)குறைந்தபடசம் ரூ.3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. (சாதாரண கம்பெனி.) நல்ல கம்பெனி ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆகும். கண்டிப்பாக ஒரு வருடத்தில் திருப்பி கொடுத்து விடுவேன். பணம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். அன்புக்கு நன்றி. பாசத்தோடு பாடகர் சுந்தர் அய்யர்.

  Sundaraiyar.K

  Ac No : 333 2011 8845

  SBi:Palacode Branch.

  iFSC : SBIN000 3689

  English summary
  The National Award winner for Best playback singer for Joker Movie released on 2016. He need help from friends and ourselves for buy musical instruments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X