Joker 2 X Review: முடிச்சு விட்டாய்ங்க.. ரசிகர்களை கடுப்பாக்கிய ஜோக்கர் 2.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா நடிப்பில் அக்டோபர் 2ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள Joker: Folie à Deux படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். ஆனால், இன்று படம் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் படத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சமீப காலமாக தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஏற்படும் அதே நிலைமை தான் பல ஹாலிவுட் படங்களுக்கும் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படங்களிலேயே உலகளவில் ரசிகர்களை கவர்ந்தது டெட்பூல் மற்றும் வால்வூரின் படம் தான்.

அந்த படத்தையே ஜோக்கர் 2 திரைப்படம் தூக்கிச் சாப்பிடும் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை இந்த படத்தின் மீது வைத்தது தான் தற்போது படத்திற்கு பெரிய சிக்கலாக உருவாகி இருப்பதாக கூறுகின்றனர். ஜோக்கர் 2 படத்திற்கு ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே காணலாம் வாங்க..
ஜோக்கர் 2 விமர்சனம்: 2019ம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் ஜோக்வின் பீனிக்ஸ் அந்த படத்தில் நடித்ததற்காக வென்றார். இந்நிலையில், ஜோக்கர் 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு தேவையில்லாமல் பாடல்கள் மூலம் படம் காட்டுறேன் என லேடி காகாவை மட்டுமே நம்பி வச்சு செய்து விட்டார்கள் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனங்கள்: தமிழ் படங்களுக்கு மட்டுமின்றி ஹாலிவுட் படமான ஜோக்கர் 2 படத்தையும் கோலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். வரும் அக்டோபர் 10ம் தேதி தமிழில் இந்த படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக இன்று உலகம் முழுவதும் ஆங்கிலத்தில் வெளியான நிலையில், படத்தை பார்த்த ஹாலிவுட் ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான பெரிய படங்களான இந்தியன் 2, கோட், தேவரா வரிசையில் ஜோக்கர்

ஷப்பா முடியலடா சாமி: கோர்ட் ரூம் டிராமாவை இசைக் கச்சேரி மேடையாக்கி கடைசி வரை படத்தின் காட்சிகளை வெறும் பாடல்களை வைத்தே நகர்த்தி ரசிகர்களுக்கு பாகவதர் காலத்து படங்களை பார்க்கும் உணர்வை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார் இயக்குநர் டோட் பிலிப்ஸ். சுத்தமாக தியேட்டரில் உட்கார முடியவில்லை. முதல் ரீலில் இருந்து கடைசி ரீல் வரை ரம்பம் தான் என இந்த ரசிகர் வறுத்தெடுத்துள்ளார்.

போரிங் மேக்ஸ்: மிகப்பெரிய தலைவலியை தந்து விட்டது ஜோக்கர் 2 திரைப்படம். ஜோக்வின் பீனிக்ஸ் மற்றும் லேடி காகாவின் நடிப்பு, ஒளிப்பதிவு படத்தின் ஃபிரேம்கள் என அனைத்தும் உலகத்தரத்தில் இருந்தாலும், படத்தின் இசையமைப்பாளர் ஒரு காட்சி எழுச்சி பெறுவதற்கு முன்பாகவே இசையமைக்கத் தொடங்கி பாடல்களை திணித்து ஒட்டுமொத்த படத்தையும் கெடுத்து விட்டார். ரொம்பவே போர் அடித்து விட்டது.

படம் பரபரப்பாகவோ விறுவிறுப்பாகவோ ரசிகர்களை கவரும் வகையிலோ கொஞ்சம் கூட இல்லை என இந்த நெட்டிசன் விமர்சனம் அளித்துள்ளார். ஜோக்கர் 2 படத்திற்கு விருதுகள் குவியலாம் என்றும் ஆனால், வசூல் ரீதியாக பெரிய அடி வாங்கப் போவது உறுதி எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











