பாடல் பாடியவரே அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம்..ஜொனிடா காந்தியின் அரபிக் குத்து டான்ஸ் செம வைரல்!
சென்னை: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்
சிவகார்த்திகேயனின் வரிகளில் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் அப்பாடலை பாடிய ஜொனிடா காந்தி இப்பொழுது அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ செம வைரலாகிறது.

பிடித்த இயக்குனராக
தமிழ் சினிமாவில் நெல்சன் இப்பொழுது அனைவருக்கும் பிடித்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் இவர் அதற்கு முன்பாகவே சிம்பு நடிப்பில் உருவாகி வந்த வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி வந்தார் எதிர்பாராத விதமாக இப்படம் ட்ராப் ஆனது.

டார்க் காமெடியை புகுத்தி
முதல் படம் கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் சீரியஸ் சப்ஜெக்ட்டை எடுத்து அதில் டார்க் காமெடியை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வகையில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்தநிலையில் நெல்சன் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

முக்கிய வேடத்தில் செல்வராகவன்
அடுத்ததாக விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை எழுதி இயக்கி வருகிறார். பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் முகமூடி படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களாக தமிழில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இயக்குனராக அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருந்த செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஜொனிடா காந்தி டான்ஸ்
வரும் ஏப்ரலில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததை அடுத்து சமீபத்தில் பீஸ்ட் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாடல் வெளியானது. அரபிக் ஸ்டைலில் தமிழ்நாட்டு குத்து கலந்த வித்தியாசமான குத்து பாடலாக வெளியான பாடல் இப்பொழுது அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் வரிகளில் அனிருத் இசையில் வெளியான இந்த பாடலை அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் ஆட்டம் போட்டு இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடலைப் பாடிய பாடகி ஜொனிடா காந்தி அரபிக்குத்து பாடலுக்கு க்யூட் நடனமாடிய வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











