அந்த செல்லம்மாவை அழைத்து வந்து அரபிக் குத்து போட்ட அனிருத்.. காதலர் தினத்துக்கு செம ட்ரீட் இருக்கு!
சென்னை: பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் முழு லிரிக் வீடியோவும் ரெடியாகி விட்டதாம்.
சமீபத்தில் நெல்சன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் மூவரும் இணைந்து அரபிக் குத்து பாடல் அறிமுக புரமோவை வெளியிட்டனர். அதில், நடிகர் விஜய்யின் குரல் மட்டும் போன் கால் மூலமாக இருந்தது.
அரபிக் குத்து பாடலை விஜய் பாடவில்லை என்றும் அனிருத் தான் பாடி உள்ளார். மேலும், அவருடன் இணைந்து பாடியிருக்கும் பெண் குரல் யாருடையது என்பது குறித்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

காதலர் தினத்துக்கு ரிலீஸ்
பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடல் காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரியும் காதலர் தின கொண்டாட்டமாகவே வெளியானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த அறிவிப்பு தொடர்பாக வெளியான புரமோ பல மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது.

அரபிக் பாட்டு எழுதிய எஸ்கே
தமிழ் பாட்டு எழுதுவதை எல்லாம் தாண்டி பான் வேர்ல்ட் அளவுக்கு யோசித்து அரபிக் குத்து பாடலை எழுதி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இருந்தே விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் செம சின்க் இருந்து வரும் நிலையில், பீஸ்ட் படத்திற்காக மெர்சலான ஒரு பாடலை எழுதி உள்ளார்.

விஜய் பாடவில்லை
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் விஜய் இந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நடிகர் விஜய் இந்த பாடலை பாடவில்லை. இசையமைப்பாளர் அனிருத் தான் இந்த பாடலை பாடி உள்ளார். இந்நிலையில், அவருடன் இணைந்து பாடிய அந்த பாடகி யார் என்கிற கேள்விக்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது.
Recommended Video

அந்த செல்லம்மாவே தான்
டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலை அனிருத் உடன் இணைந்து பாடிய அதே செல்லம்மா ஜோனிடா காந்தி தான் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலையும் பாடி இருக்கிறாராம். அவர் கலந்து கொண்ட புரமோ வீடியோவும் தயாராகி விட்டதாம். வரும் பிப்ரவரி 14ம் தேதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications