twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா மிரட்டல்.. ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கிய படக்குழு.. ஏப்.10 வரை ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி!

    By
    |

    சென்னை: ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கிய படக்குழு, ஏப்ரல் 10 ஆம் தேதி வரை ஷூட்டிங் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

    இவர் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது.

    ஆஹா.. நம்ம சன்னி லியோனா இது.. சேலையில எம்புட்டு அழகா பக்தி பரவசமா இருக்காங்க பார்த்தீங்களா!ஆஹா.. நம்ம சன்னி லியோனா இது.. சேலையில எம்புட்டு அழகா பக்தி பரவசமா இருக்காங்க பார்த்தீங்களா!

    உடல் எடை

    உடல் எடை

    இப்போது, ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இந்த பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, தனது உடல் எடையை கடுமையாகக் குறைத்துள்ளார், பிருத்விராஜ். இந்தப் படத்தில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

    ஜோர்டான்

    ஜோர்டான்

    இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன், ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்றது. அங்குள்ள வார்டி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததுகொண்டிருந்த போதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது.

    உணவு தீர்ந்துவிடும்

    உணவு தீர்ந்துவிடும்

    இதனால் அந்த நாட்டிலும் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, படக்குழுவால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை. இந்நிலையில் இயக்குனர் பிளஸ்சி, கேரள எம்.பி, ஆன்டோ ஆன்டனிக்கு இமெயில் ஒன்றை அனுப்பினார். அதில், கொரோனா பிரச்னையால் இங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் எங்கள் படக்குழு, பாலைவனப் பகுதியில் ஒரு கூடாரத்தில் முடங்கியுள்ளோம்.

    Recommended Video

    Sivakarthikeyan Advice | Please Don't this | Self Quarantine
    இந்திய தூதரகம்

    இந்திய தூதரகம்

    நாங்கள் வைத்திருக்கும் உணவு விரைவில் தீர்ந்துவிடும். என்ன செய்வதென்று தெரியவில்லை. தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுபற்றி, எம்.பி ஆன்டோ ஆன்டனி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவர், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகத்துடன் உடனடியாக தொடர்புகொள்ள அறிவுறுத்தினார்.

    ஏப்ரல் 10 வரை

    ஏப்ரல் 10 வரை

    இதையடுத்து படக்குழு அவர்களைத் தொடர்பு கொண்டது. பிறகு, ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அவர்களுக்கு னுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு இந்தியா திரும்பும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

    English summary
    Jordan government permits Prithviraj's Aadujeevitham team to shoot till April 10
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X