கவனம் ஈர்க்கும் இசை கலைஞர் செந்தமிழ் பொயட்டு.. ஹிட்டடித்த "திக்கிமுக்கி" பாடல்.. இதை கேட்டீங்களா?!

சென்னை: தமிழ்நாட்டில் ஹிப் ஹாப் மற்றும் ரேப் பாடல்கள் கலாச்சாரம் தற்போது புதிய உச்சம் தொட்டுள்ளது. புதிய பல திறமையாளர்கள், பாடகர்கள், ரேப் கலைஞர்கள் தங்கள் பாடல்களை வெளியிட்டு புகழ் உச்சியை அடைந்து வருகிறார்கள். அதில் செந்தமிழ் பொயட்டு (Senthamizh Poetu) என்னும் மிதிலேஷ கவனம் ஈர்த்து வருகிறார்.

தமிழ் இசை உலகில் பிரேக்கிற்காக காத்து இருக்கும் கலைஞர்களுக்கு ஜோஷ் (Josh) சமீப காலமாக பாலம் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறது. இசை நிகழ்ச்சிகள், கான்செர்ட்களை நடத்தி பாடகர்கள், கலைஞர்களுக்கு பெரிய அளவில் மேடை அமைத்து கொடுப்பதில் ஜோஷ் (Josh) முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக சமீபத்தில் ஜோஷ் (Josh) செயலி மூலம் JAR என்ற ஐபியும் கூட உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Josh app concert fame Senthamizh Poets new Thikki Mukki Song goes viral

இதன் மூலம் பல கலைஞர்கள் தங்கள் பாடல்கள், படைப்புகளை வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜோஷ் (Josh) செயலின் இசை கான்செட் நிகழ்ச்சியான #breatheoflife நிகழ்ச்சியில் பாடியவர்களில் கவனம் ஈர்த்தவர் செந்தமிழ் பொயட்டு (Senthamizh Poetu) என்னும் மிதிலேஷ். ரேப் மற்றும் ஹிப் ஹாப் பாடல்கள் மூலம் தமிழ் இண்டிபென்டட் மியூசிக் உலகில் இவர் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளார். இவரின் சமீபத்திய பாடல்கள் எல்லாம் ஸ்பாட்டிபை செயலியில் செம ஹிட் அடித்துள்ளது.

கொடைக்கானலை சேர்ந்த இவர் பொறியியல் படித்துவிட்டு இசை உலகம் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக பாடல்களை வெளியிட தொடங்கி தற்போது முக்கியமான இண்டிபென்டட் இசை கலைஞராக உருவெடுத்துள்ளார். சமுதாய பிரச்சனைகள், நாட்டில் நடக்கும் அவலங்கள், பல்வேறு முக்கிய விஷயங்களை மையமாக வைத்து இவரின் பாடல்கள் எழுதப்பட்டு வெளியாகி வருகிறது.

Josh app concert fame Senthamizh Poets new Thikki Mukki Song goes viral

வித்தியாசமான வரிகள், கேட்டதும் பிடிக்கும் மியூசிக், சட்டென கவனிக்க வைக்கும் குரல் என்று செந்தமிழ் பொயட்டு (Senthamizh Poetu) என்னும் மிதிலேஷ் டிரெண்டிங்கில் இடம் பிடிக்க தொடங்கி உள்ளார். இவர் வெளியிட்ட கண்ணீர் யாவும், ஆமா சாமி போன்ற பாடல்கள் எல்லாம் ஸ்பாட்டிபை செயலியில் ஹிட் அடித்து வைரலாகி வருகிறது. மனித உணர்வுகள், ஆசைகள், சோகங்கள் என பல விஷயங்களை சொல்லும் அளவிற்கு இவரின் பாடல்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில்தான் செந்தமிழ் பொயட்டு (Senthamizh Poetu) என்னும் மிதிலேஷ் இன்னொரு பாடலையும் தற்போது வெளியிட்டுள்ளார். "திக்கி முக்கி" என்னும் இந்த பாடல் ஸ்பாட்டிபை செயலில் டிரெண்டிங்கில் உள்ளது. ஜோஷ் செயலியின் இசை நிகழ்ச்சியின் ஹிட் அடித்த இவரின் புதிய பாடலான திக்கி முக்கி திக்கி முக்கி திரியிறோம் என்ற பாடலும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Josh app concert fame Senthamizh Poets new Thikki Mukki Song goes viral

ஒருவருக்கு புகழ் கிடைத்தால் அவர் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்பதை வைத்து இந்த பாடல் எழுதப்பட்டு உள்ளது.இவரின் பாடலை கேட்க இந்த லிங்கை கிளிக் ThikkiMukki செய்யவும்.

இதற்காக திக்கி முக்கி சேலஞ்ச் என்னும் போட்டியையும் ஜோஷ் அறிமுகப்படுத்தி உள்ளது. திக்கி முக்கி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ எடுத்து அதை நீங்கள் இன்ஸ்ட்ராகிராமில் பதிவேற்றலாம். இதற்கு நீங்கள் #thikkimukki என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்த வேண்டும். இப்போதே இந்த பாடலுக்கு பலர் நடனம் ஆடி விதவிதமாக வீடியோ பதிவேற்றி வருகிறார்கள். நல்ல வீடியோக்களை சிறப்பு பரிசுகளும் காத்திருக்கிறது மக்களே.

வளர்ந்துவரும் கலைஞரான இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க இந்த் senthamizh_poetu லிங்கை கிளிக் செய்யவும்.

More from Filmibeat

Read more about: songs பாடல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X