Josh App உடன் கைகோர்த்த ஜிவி பிரகாஷ்.. ‘ஆயிரத்தில் ஒருவன்’ கச்சேரி கோவையில் எப்போ நடக்குது தெரியுமா?

சென்னை: இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் அசத்தி வரும் ஜிவி பிரகாஷ் குமார் விரைவில் கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த 'ஆயிரத்தில் ஒருவன்' என்கிற தலைப்பில் கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இளைஞர்களின் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டி வரும் ஜோஷ் ஆப் உடன் இணைந்து இந்த கச்சேரியை ஜிவி பிரகாஷ் நடத்த உள்ளார்.

Josh App joins with GV Prakash Kumars Aayirathil Oruvan concert

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஆண்ட்ரியா, ஜோனிடா காந்தி உள்ளிட்ட பல இசை பிரபலங்கள் சமீப காலமாக இசை கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரைப்படங்களில் ஹீரோவாகவும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராகவும் படு பிஸியாக பணியாற்றி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வரும் ஜிவி பிரகாஷ் நேரடியாகவும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தவும் கொண்டாட்ட மோடுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக, வரும் மே 27ம் தேதி மாலை 6 மணி முதல் கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து 'ஆயிரத்தில் ஒருவன்' கச்சேரி நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

இந்த பிரம்மாண்ட இசைக்கச்சேரிக்கு ஜோஷ் ஆப் குழுவுடன் இணைந்து பயணிக்கப் போகிறார் ஜிவி பிரகாஷ் என்கிற ஹாட் அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

Josh App joins with GV Prakash Kumars Aayirathil Oruvan concert

எம்கே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிட்யூஷன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X