ஜோஷ் இசைக் கலைஞர் தமிழ் ராப்பர் எம்சி வள்ளுவரின் “பஞ்சர் ஆன லைஃப்” புதிய பாடல் டிரெண்டாகுது!
சென்னை: "இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.
அதுமட்டுமின்றி இந்த செயலி இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற இன்னொரு சிறப்பான காரணமும் உள்ளது. ஜோஷ் ஆப் க்ரியேட்டர்களுக்கு அடிக்கடி போட்டிகளை நடத்தி அவர்களது திறமையை மேலும், அதிகரிக்கச் செய்வது தான் அது.
இந்நிலையில், தற்போது ஜோஷ் செயலின் பிரபல இசைக் கலைஞர் தமிழ் ராப்பர் எம்சி வள்ளுவரின் புதிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "பஞ்சர் ஆன லைஃபு" என்கிற வித்தியாசமான டைட்டிலில் இந்த பாடலை உருவாக்கி உள்ளார் எம்சி வள்ளுவர்.

சென்னையை சேர்ந்த சுதேசி பாடல் ஸ்டூடியோவான கேஒய்என் ரெக்கார்ட்ஸை இயக்கி வரும் எம்சி வள்ளுவர் ஏராளமான சூப்பர் ஹிட் ராப் இசை பாடல்களை பாடி உள்ளார். ஜோஷ் செயலியின் ஒரு அங்கமாக திகழும் இவருக்கு ஓராயிரம் ரசிகர்கள் ஜோஷ் செயலியில் உள்ளனர். 2 ஆயிரம் ஹார்ட்டின்கள் கிடைத்துள்ளன. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3 ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள இன்னொரு ராப் இசை கலைஞர் ஸ்டவ் ஃபிரான்சிஸ் மற்றும் எம்சி வள்ளுவர் இருவரும் இணைந்து சொந்தமாக சுதேசியான தர லோக்கல் பசங்க சுருக்கமாக TLP என அழைக்கப்படும் ஹிப் ஹாப் மியூசிக் பேண்டையும் நடத்தி வருகின்றனர்.
KYN ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் பாடல் தான் இந்த 'பஞ்சர் ஆன லைஃபு'. முன்னதாக டிஜே அருணாச்சலம் மற்றும் ராபர்ட் சர்குணம் பாடிய ஹலோ கேக்குதா பாடலையும் இந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
பஞ்சர் ஆன லைஃபு பாடலுக்கு முன்னதாக வள்ளுவர் 10க்கும் மேற்பட்ட ராப் இசை பாடல்களை வெளியிட்டுள்ளார். அதில், 'கதிர்' மற்றும் 'எங்க வைப்' பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. பஞ்சர் ஆன லைஃப் பாடல் 22, ஜூலை 2022ல் வெளியானது. அதன் முழு வீடியோ பாடல் 11 செப்டம்பர் 2022ல் வெளியானது. இந்த பாடல் துவண்டு கிடக்கும் மனிதனை தட்டி எழுப்பி முன்னேற ஓட வைக்கும் விதமாக உருவாகி உள்ளது. யூடியூபில் 120K+ வியூஸ்களை அள்ளி டிரெண்டாகி வருகிறது.
ஜோஷ் செயலியின் திறமையான ராப் இசையமைப்பாளரான எம்சி வள்ளுவரின் இந்த பாடல் ஜோஷ் ஆப் பிரியர்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











