Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முடிவுக்கு வரும் நீண்ட நாள் காத்திருப்பு.. ஜோஷ்வா: இமை போல் காக்க அப்டேட் இதோ!
சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் 'ஜோஷ்வா: இமை போல் காக்க'. ராஹெய் நாயகியாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட்டில் நதிகளில் நீராடும் சூரியன் ஷுட்டிங்... மீண்டும் பிஸியான சிம்பு – கவுதம் மேனன்
நீண்ட காலத்திற்கு பின்னர் இந்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி கவுதம் மேனன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
நடிக்க தொடங்கினார்
கவுதம் மேனன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குவது மட்டுமன்றி நடிக்கவும் தொடங்கியுள்ளார் கவுதம் மேனன். தற்போது நவரசா (கிட்டார் கம்பி மேலே நின்று) படத்தை இயக்கியும், ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தும் முடித்துள்ளார் கவுதம் மேனன்.
கால தாமதம்
கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ஜோஷ்வா: இமை போல் காக்க ஆகிய படங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்க அதில் என்னை நோக்கி பாயும் தோட்டா மட்டுமே ஒரு வழியாக 2019ம் ஆண்டு வெளிவந்தது. மற்ற படங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இந்தாண்டு வெளியீடு
அண்மையில் துருவ நட்சத்திரம் குறித்து கவுதம் மேனன் பேட்டியளித்தார். போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் இன்னும் 10 நாட்கள் மீதம் இருப்பதாகவும், திட்டமிட்ட படி படத்தை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடுவோம் எனவும் கவுதம் மேனன் உறுதியளித்துள்ளார்.
செப்டம்பர் வெளியீடு
அதைத்தொடர்ந்து தற்போது ஜோஷ்வா: இமை போல் காக்க அப்டேட் வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் இந்த படம் சார்ந்த பணிகளை முழுவதுமாக முடித்துள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனம் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.