கெளதம் மேனன் ஹீரோ.. சீறு படத்தில் வில்லன்.. இப்படி மிரட்டுறீங்களே எப்படி வருண் இதெல்லாம்!

Recommended Video

ஜீவாவுக்கு கம்பேக் கிடைத்ததா.. சீறு படம் எப்படி இருக்கு? | Seeru Movie Reviews - Public Opinions

சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், வருண், நவ்தீப் மற்றும் சதீஷ் நடிப்பில் நேற்று வெளியாகி உள்ள படம் சீறு.

தூள், திருப்பாச்சி படங்களை போல ஒரு பக்காவான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக அதிரடி காட்டியுள்ளது இந்த படம்.

பப்பி, கெளதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க படங்களில் ஹீரோவாக நடித்து வரும் வருண் இந்த படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

சிங்க நடை

சிங்க நடை

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வா டீல், றெக்க படங்களை இயக்கிய ரத்ன சிவா சீறு படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா மற்றும் கீ ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சீறு சிங்க நடை போடுகிறது.

பப்பி ஹீரோ

பப்பி ஹீரோ

முரட்டு சிங்கிள் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்த பப்பி படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி படமாக மாறியது. இந்த படத்தில் வருணுக்கு ஜோடியாக கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்தார். யோகி பாபுவின் கலக்கல் கவுன்ட்டர் காமெடியில் படம் பட்டையை கிளப்பியது.

ஜோஷ்வா இமை போல் காக்க

ஜோஷ்வா இமை போல் காக்க

கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் கடந்த தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய ஐசரி கணேஷ் உதவிக் கரம் நீட்டினார். அதனை தொடர்ந்து, அவரது தயாரிப்பில் உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை நாயகன் வருணை வைத்து கெளதம் மேனன் இயக்கி வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

வில்லனாக ஏன்?

வில்லனாக ஏன்?

நடிப்பின் மீது ஆசை கொண்ட நடிகர் வருண் தன்னால் வில்லனாகவும் மிரட்ட முடியும் என சீறு படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். ஹீரோவாக கூட நடித்து விடலாம். ஆனால், வில்லனாக படத்தை தாங்கும் போது தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதால் வியாசர்பாடி மல்லியாக நடித்து அசத்தியுள்ளார் வருண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X