ஜோஷ்வா இமை போல் காக்க ’ஹே லவ்’ பாடல்.. 29ம் தேதி ரிலீஸ்.. படக்குழு அறிவிப்பு!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹே லவ்' வீடியோ பாடல் வரும் பிப்ரவரி 29ம் தேதி ரிலீசாகும் என கெளதம் மேனன் அறிவித்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அடுத்த படம் தான் ஜோஸுவா இமை போல் காக்க. இந்த படத்தில் முதல் முறையாக ஆக்ஷ்ன் ஹீரோவாக வருண் நடித்திருக்கிறார். வருண் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படமும் இதுதான். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து இருக்கிறார்.

 Joshua imai pol kaakha, hey love song promo release

ஜோஸுவா படத்தின் முன்னோட்டம் இதற்கு முன்பே வெளியிடபட்ட நிலையில் தற்போது படத்தில் இருந்து ஹே லவ் பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்து இருக்கிறார். முன்னோட்டத்தில் காட்டபட்ட அதே காட்சிகள் தான் தற்போது பாடல் ப்ரோமோவிலும் காட்டபட்டிருக்கிறது .

இந்த பாடல் பிப்ரவரி 29 வெளியாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் வழக்கமான கௌதம் மேனனின் படங்கள் பாணியிலே எடுக்கப்பட்டிருப்பது முன்னோட்டத்தை பார்க்கும் போது நமக்கே தெரிகிறது. கௌதம் மேனன் படங்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஜோஸுவா படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

 Joshua imai pol kaakha, hey love song promo release

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிறந்த இசையையும் பாடலையும் கொடுத்திருப்பார் தர்புகா சிவா. அதே போல இந்த படத்திற்கும் சிறந்த இசையை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மற்றொரு படம் தான் ஜோஸுவா. இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்த்து விட்டு தான் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட்டதாக ஐசரிகணேஷ் பல பேட்டிகளில் கூறியிருந்தார் .

 Joshua imai pol kaakha, hey love song promo release

கௌதம் மேனனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த பாடல் ப்ரோமோவும் படம் வெளியீடு தேதியும் அறிவிக்கபட்டிருக்கிறது.கௌதம் மேனன் இந்த படத்திற்கு பிறகு விக்ரமை வைத்து துருவநட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X