இதுதான் நன்றிக் கடனா.. ஜோஷ்வா இமை போல் காக்க டீஸர் எப்படி இருக்கு?
Recommended Video
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் வருண், ராணி நடிப்பில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய உதவிய ஐசரி கணேஷுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் வருணை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பப்பி படத்தின் மூலம் அறிமுகமான வருண் இரண்டாவது படத்திலேயே மாஸ் ஹீரோவுக்கான சப்ஜெக்டில் அதிரடி காட்டி வருகிறார்.
கெளதம் மேனன் கம்பேக்
காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த கெளதம் மேனன், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டார். தற்போது கடன் பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் கம்பேக் ஆகியுள்ளார்.

பப்பி ஹீரோ
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கொண்ட நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் வெளியான பப்பி படம் 25 நாட்களை கடந்து போதுமான வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான வருண், தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷ்வா படத்தில் நடித்து வருகிறார்.
ஜோஷ்வா
ஜோஷ்வா இமை போல் காக்க என வழக்கம் போல கெளதம் மேனன் ஸ்டைலில் நீண்ட தலைப்புடன் அடுத்த ஆண்டு காதலர் தின வெளியீடாக தயாராகி வருகிறது. வருண், ராணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.
டீஸர் எப்படி இருக்கு?
குந்தவை சிதம்பரம் எனும் பணக்கார பெண்ணை காப்பாற்றும் பாடிகாடாக ஹீரோ ஜோஷ்வா செயல்பட்டு வருகிறார். ஹாலிவுட் பட ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.

வெப்சீரிஸ் காப்பி
பாடிகாட் எனும் வெப்சீரிஸ் கதை போலவே இந்த படம் இருக்கிறது என்று டீஸரை பார்த்த சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நன்றிக்கடனுக்காக மாஸ் ஹீரோ செய்ய வேண்டிய படத்தை வருணை வைத்து கெளதம் மேனன் இயக்கி வருகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











