சிவக்குமார் கிளாப் அடிக்க... சூர்யா கேமராவை ஆன் செய்ய... ஆர்ஜேவாக மாறிய ஜோதிகா!

ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Recommended Video

ஜோதிகாவின் புது படம் காற்றின் மொழி பூஜையுடன் ஆரம்பம் - வீடியோ

சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பை நடிகர்கள் சூர்யா, சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் " மொழி ". இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் " காற்றின் மொழி " படத்தில் இணைகிறது.

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது.

கேமரா ஆன்...

கேமரா ஆன்...

இப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று எளிமையாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா, ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் சூர்யா கேமராவை ஆன் செய்ய நடிகர் சிவகுமார் கிளாப் போர்டை பிடித்து படத்தை துவக்கி வைத்தனர்.

நடிகர்கள்..

நடிகர்கள்..

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. விதார்த் , லட்சுமி மஞ்சு , M.S. பாஸ்கர் , மனோபாலா , குமாரவேல் , மோகன் ராமன் , உமா பத்மநாபன் , சீமா தனேஜா , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள்

மற்றவர்கள்

இசை A.H. காஷீப் , பாடல் மதன் கார்க்கி , கேமரா மகேஷ் முத்துசாமி , கலை கதிர் , உடை பூர்ணிமா , எடிட்டர் பிரவீன் KL , வசனம் பொன் பார்த்திபன் , PRO ஜான்சன். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகும் குடும்பத்தலைவி சந்திக்கும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதைக்களம். இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் சுலோச்சனா என்ற நாயகி கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். அவரது கணவராக மானவ் கவுல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X