விஜய்யை தொடர்ந்து அந்த டாப் ஹீரோவுடன் நடிக்கிறாரா ஜோதிகா.. இளம் நடிகைகளுக்கு ஆப்பு தான் போல!
சென்னை: சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து வந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால், முன்பை போல கவர்ச்சி நடிகையாக எல்லாம் நடிக்காமல், உமன் சென்ட்ரிக் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி சீனியர் நடிகை ரேஞ்சுக்கு மாறியிருந்தார். ஆனால், சமீப காலமாக வொர்க்கவுட் எல்லாம் செய்து ஸ்லிம்மாக மாறியுள்ள ஜோதிகா தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் மாதவன் உடன் ஜோடி போட்டு ஜோதிகா நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மீண்டும் விஜய்யுடன்: நடிகை ஜோதிகா குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் நடித்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோதிகா இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது மறுப்போ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கவுள்ள நிலையில், சீனியர் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதவனுக்கு ஜோடி: மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடித்துள்ள ஜோதிகா அடுத்ததாக இந்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார். மும்பையில் புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் செட்டில் ஆன ஜோதிகா தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவதாக கூறுகின்றனர்.

தளபதி 68 படத்தைத் தொடர்ந்து மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் நடிக்கும் இந்தி படத்திலும் ஜோதிகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிரது.
பிரியமான தோழியை மறக்க முடியுமா: நடிகர் மாதவனுக்கு ஜோடியாக பிரியமான தோழி, டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் ஜோதிகா நடித்துள்ளார். பிரியமான தோழி படத்தில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரியை இப்போதும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா மாதவன் உடன் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு வேறலெவல் ட்ரீட்டாக இருக்கும்.
சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு தனது டாப் ஹீரோயின் அந்தஸ்த்தை விட்டுக் கொடுத்த ஜோதிகா மீண்டும் 2.0 வெர்ஷனாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி பொட்டு நடித்தால் சக நடிகைகளுக்கும் யங் ஹீரோயின்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை நிச்சயம் உருவாக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











