எல்லாத்துக்கும் காரணம் குஷ்பூதான்?.. நொந்துபோன ஜெயம் ரவியின் அப்பா - அம்மா?.. பிரபலம் கொடுத்த ஷாக்

சென்னை: ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்திருக்கிறார். ஆனால் ரவியுடன் பேசுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என ஆர்த்தி கூறியிருக்கிறார். இதற்கிடையே கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டதற்கு ரவி தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரவி -ஆர்த்தி விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

ஜெயம் ரவி கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்வாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

jayam ravi aarthi sabitha joseph


நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார் ரவி. அவரது இந்த விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆர்த்தி விளக்கம்: அதனையடுத்து ஆர்த்தி அளித்திருந்த முதல் விளக்கத்தில் இந்த விவாகரத்துமுடிவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது. ரவியுடன் பேசுவதற்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்று சொல்லியிருந்தார். அதனையடுத்து ரவியும் பதில் விளக்கம் கொடுத்தார். அதாவது ஆர்த்திக்கு முன்னரே தெரியும் என்றும் வீட்டு வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட தனக்கு கிடைக்கவில்லை என்று கொட்டியிருந்தார் ரவி. அதனையடுத்து ஆர்த்தியை பலரும் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.

சபிதா பேட்டி: தொடர்ந்து தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாக ஆர்த்தி அளித்த இன்னொரு விளக்கத்தில் நான் அமைதியாக இருக்கிறேன் என்பதால் குற்றவுணர்வோ, தவறோ என்னிடம் இருப்பதாக நினைக்க வேண்டாம் என பல விஷயங்களை தெளிவுப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சில விஷயங்களை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

நொந்துபோன ரவி அப்பா - அம்மா: குஷ்பூதான் இந்தக் கல்யாணத்துக்கு காரணம். முதலில் ஜெயம் ரவியின் வீட்டில் ஆர்த்தியை மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கு விருப்பமே இல்லை. ஆனால் ஜெயம் ரவியின் காதல், குஷ்பூவின் பேச்சுவார்த்தை எல்லாம் ரவியின் அப்பாவை மாற்றியது. இப்போது இரண்டு பேருக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது. இதனால் தனது மகனின் வாழ்க்கை போய்விட்டதே என்று ரவியின் அப்பாவும், அம்மாவும் நொந்து போயிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு ரவி மீது கொஞ்சம் அதிகமாகவே பாசம் இருக்கிறது.முக்கியமாக இத்தனை வருடங்கள் பாசத்தை கொட்டி வளர்த்த மகனின் வாழ்வு இப்படி போய்விட்டதே என்ற மனநிலையில் இருக்கிறார்கள்”என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X