விஜய் ரசிகர்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா?.. அஜித் செய்தது உச்ச காமெடி.. கொந்தளித்த பத்திரிகையாளர்
சென்னை: Vijay And Ajith (விஜய் மற்றும் அஜித்) மிக்ஜாம் புயலின்போது விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் செயல்பட்டதை பத்திரிகையாளர் அந்தணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நிலைகுலைந்து போயிருக்கிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கி கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்களும் கடுமையாக அவதிக்குள்ளாகினர். அவர்களின் அவதியை போக்க மற்ற மாவட்டங்களில் இருந்து பலரும் உதவி செய்துவருகின்றனர். தமிழ்நாடு அரசும் பல நடவடிக்கைகளை செய்துவருகிறது.

நிதியுதவி: திரையுலகை பொறுத்தவரை சூர்யா, கார்த்தி ஆகியோர் பத்து லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதியுதவி கொடுத்தனர். அதேபோல் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாயும்; கலக்கப்போவது யாரு பாலா 200 குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாயும் நிதியுதவி கொடுத்தனர். ஆனால் வளர்ந்த நடிகர்கள் யாரும் அப்படிப்பட்ட உதவி செய்யவில்லை.
விஜய், அஜித்: குறிப்பாக விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கண்டிப்பாக பெரிய உதவி ஏதேனும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் நிதியுதவியாக இதுவரை எதுவும் செய்யவில்லை. மாறாக, துயர் துடைக்க இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்தார் விஜய். அதேபோல் அஜித் அமீர்கானுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் உதவி செய்தார்.
விமர்சனம்: விஜய் மற்றும் அஜித்தின் இந்த செயல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கோடி கோடியாக சம்பாதிக்கும் இரண்டு பேரும் இப்படியா இருப்பது என கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதுவும் அஜித்தை நேரடியாக போஸ் வெங்கட் விமர்சித்துவிட்டார். அதேபோல் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவு போடப்பட்டபோது விஜய் புகைப்படத்துடன் ஒருவர் நின்றிருந்ததும் விமர்சனத்தை சந்தித்தது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ரசிகர்களால்தான் நடிகர்கள் மாளிகை போல் வீடு கட்டியிருக்கிறார்கள். அவர்கள் உதவி செய்தால் என்ன. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு போடப்பட்டபோது அந்த இடத்தில் எதற்காக விஜய் புகைப்படம். உணவு போட்டதைவிட விளம்பரம் செய்துகொண்டதுதான் அதிகம். உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா?
அஜித் மீதும் விமர்சனம்: அதேபோல் பணகாரர்களின் கண்ணுக்கு பணக்காரன் மட்டும்தான் தெரிவார். அதுபோல்தான் அஜித்தின் கண்களுக்கு அமீர்கான் தெரிந்திருக்கிறார். அவர் ஏரியாவிலேயே பலர் கஷ்டப்பட்டார்கள். அவர்களை எல்லாம் அவருக்கு தெரியவில்லை. அமீரும், விஷ்ணு விஷாலும் தெரிந்திருக்கிறார்கள். அதெல்லாம் உச்சபட்ச காமெடி” என்றார்.


Click it and Unblock the Notifications











