பனையூர் பண்ணையார் டூ மினி ஜெயலலிதா.. விஜய் எளிமையெல்லாம் இல்லை.. பிரபலம் இப்படி சொல்லிட்டாரே?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் நேற்று பரந்தூருக்கு சென்றார். அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் 13 கிராம மக்களை சந்தித்தார். அதனையடுத்து பிரசார வாகனத்தில் இருந்தபடி பேசினார் அவர். அவரது பேச்சு தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. மேலும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது. இந்தச் சூழலில் அவரது பரந்தூர் விசிட் பற்றி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

கோலிவுட்டில் விஜய் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அவர் சினிமாவுக்குள் வந்தபோது அவரை கிண்டல் செய்யாதவர்களே இல்லை. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது கடன் பணி செய்வதும், திறமையை வளர்ப்பதும்தான் என்ற நோக்கத்தில் படிப்படியாக முன்னேறி தனக்கென தனி சிம்மாசனத்தை உருவாக்கினார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய்வரை வியாபாரம் ஆகின்றன. இதன் காரணமாக அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற நிலையும் இருந்தது.

vijay tamizhaga vetri kazhagam anthanan


தமிழக வெற்றிக் கழகம்: சூழல் இப்படி இருக்க எல்லோரும் எதிர்பார்த்தபடியே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் தனது கரியர் டாப்பில் இருக்கும்போது கட்சியை தொடங்கிவிட்டு; இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொன்னதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. விஜய்யின் அந்த முடிவையும்கூட சமுத்திரகனி உள்ளிட்டோர் பலமாக ஆதரித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பரந்தூர் பயணம்: அரசியல் கட்சி தொடங்கி திமுகவை கடுமையாக விமர்சித்த அவரை திமுகவினரும் விமர்சிக்கிறார்கள். முக்கியமாக பனையூரில் இருக்கும் அவரது அலுவலகத்தில் வைத்து ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்றெல்லாம் பேசினார்கள். அதற்கு செயலில் பதிலடி கொடுக்கும் விதமாக பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 900க்கும் மேற்பட்ட நாட்கள் போராடிவரும் 13 கிராம மக்களை சந்திப்பதற்காக நேற்று அவர் அங்கு சென்றார். அவரை காண்பதற்கு வழி நெடுகிலும் மகள் திரண்டிருந்தனர்.

விஜய்யின் பேச்சு: பிரசார வாகனத்தில் சென்ற அவர் பேசுகையில், “நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இங்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்” என்றார். அவரது இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்தாலும் மறுதரப்பினர் கடுமையான கண்டனத்தை முன்வைத்துவருகிறார்கள். மேலும் சினிமாவில் பேசும் வசனம் போல் நேற்று அவர் பரந்தூரில் பேசினார் என்றும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

அந்தணன் வீடியோ: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனது யூடியூப் சேனலில், “பனையூர் பண்ணையார் என்று விஜய்யை சோஷியல் மீடியாக்களில் விமர்சித்தார்கள். ஆனால் அவர் இதோ களத்துக்கு செல்கிறேன் பார் என்று சொல்லி பரந்தூருக்கு சென்றார். அங்கு அவர் வருவதற்காக ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் சிறப்பாகத்தான் செய்திருந்தார். ஆனால் விஜய் எளிமையாகவெல்லாம் வரவில்லை. அவரை நேற்று பார்க்கையில் மினி ஜெயலலிதாவை பார்ப்பது போல்தான் இருந்தது. இந்த பட்டோடத்தை விட்டுவிட்டு எளிமையாக இருந்தால் தமிழ்நாடு அரசியலில் விஜய்க்கு தவிர்க்க முடியாத இடம் நிச்சயம் உண்டு. பரந்தூரில் இன்னும் கொஞ்சம் அவர் தெளிவாக பேசியிருக்கலாம்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X