Rajini - விஜய் ரசிகர்களால் ரஜினிகாந்த் மன உளைச்சலுக்கு ஆளானார்.. அந்தணன் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் லால் சலாம் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் ரஜினிகாந்த் மற்றும் லால் சலாம் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் ரஜினியின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. முக்கியமாக விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து இனி ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்‌ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகின்றன என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.

 Jouranlist Anthanan Talks about Rajinikanth And Vijay Controversy

லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.

GOAT: அந்தவகையில் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லபடுகிறது.

ரஜினி Vs விஜய்: இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் ஜெயிலருக்கு முன்னதாக சரியாக போகவில்லை.குறிப்பாக வசூலும் ஒழுங்காக செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் நாற்காலியில் இருந்து ரஜினி இறங்கிவிட்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என தளபதி ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். இந்த விவகாரம் ஜெயிலர் ரிலீஸின்போது பற்றி எரிந்துகொண்டிருந்தது.

முற்றுப்புள்ளி வைத்த விஜய்: அதிலும் ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதை இந்த விவகாரத்தை மேற்கொண்டு பரபரப்பாக்கியது. நிலைமை இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும் நீரு பூத்த நெருப்பாக இன்னமும் இந்த பிரச்னை கனன்றுகொண்டுதான் இருந்தது.

லால் சலாம் ரஜினி பேச்சு: இந்தச் சூழலில் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது பேசிய ரஜினிகாந்த், 'காக்கா கழுகு கதையை நான் விஜய்யை நினைத்து சொல்லவில்லை. நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய். ரஜினிக்கு போட்டி ரஜினிதான். விஜய்க்கு போட்டி விஜய்தான். ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்வது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு திரைத்துறையில் வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கியமாக இந்த பேச்சு விஜய் - ரஜினி ரசிகர்களிடையே இருக்கும் மோதல் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து பேசியிருக்கும் வலைப்பேச்சு அந்தணன், "ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு பெரிய கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. இந்த பக்குவமான பேச்சுக்கு பின்னால் சுய லாபங்கள் இருக்கலாம். ஆனால் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களின் கோபத்தை தணித்திருக்கிறது. ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சில் ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதையை சொன்னதால்தான் அவ்வளவு பெரிய ஓபனிங் படத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.

ரஜினியின் அந்தப் பேச்சுக்கு பிறகு அவரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரொம்பவே தாக்கினார்கள். முக்கியமாக ரம்பா விளையாட்டாக சொன்ன ஒரு விஷயத்தை ரஜினி ரசிகர்கள் குறிப்பிட்டே பெரிதாக்கினார்கள். அதனை பார்த்து ரஜினி கண்டிப்பாக மன உளைச்சல் அடைந்திருப்பார். இனியும் விஜய் ரசிகர்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் மோதல் இருக்கக்கூடாது என்பதால்தான் அவர் இப்படி பேசியிருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X