மருதநாயகத்துக்கு பதில் தான் தக் லைஃப்?.. ஓஹோ கதை இப்படி வேற போகுதா?.. அந்தணன் சொன்ன சீக்ரெட்

சென்னை: Thug Life (தக் லைஃப்) கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படம் பற்றி பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் படம் வெளியானது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக இந்தியன் 2வில் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்திலும் மணிரத்னம் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் கமல் ஹாசன் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Jouranlist Anthanan Talks about Thug Life Movie

தக் லைஃப்: கமலும் மணிரத்னமும் இணையும் படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மணிரத்னத்தின் படங்கள் என்றாலே அதன் பெயர் தமிழில் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் கமலும், மணியும் என்ன பிளானோடு வருகிறார்கள் என்று தெரியவில்லை என ரசிகர்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இன்ட்ரோ வீடியோ: இந்த சூழலில் படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் கமல் ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அந்த வீடியோவில் அவரை சிலர் தாக்க வருவது போன்றும் கமல் ஹாசன் அவர்களுக்கு பதிலடி கொடுப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.

சர்ச்சை: வீடியோவுக்கு ஒருதரப்பினர் வரவேற்பை கொடுத்தாலும் மறுதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கமல் ஹாசன் எப்போதும் சாதி பெயரை விடவே மாட்டாரா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இன்ட்ரோ வீடியோவே ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் தக் லைஃப் குறித்து பேசியிருக்கிறார்.

பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்த இன்ட்ரோ வீடியோ நன்றாகவே இருக்கிறது. ஆனால் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற பெயர் என்ன மாதிரியான சர்ச்சையை உண்டு செய்யப்போகிறதோ. கமல் ஹாசன் மருதநாயகம் படத்துக்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று நிதி கேட்டார். அதுவரை எடுக்கப்பட்டிருந்த காட்சிகளை காட்டி நிதி கேட்டார்.

இனி வாய்ப்பு இல்லை: ஆனால் அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஏனெனில் அப்போது தமிழ் சினிமாவின் வியாபாரம் என்பது சின்ன வியாபாரம்தான். அப்போது கமல் ஹாசன் இளைமையுடனும் வேகத்துடனும் இருந்தார். அந்த கமல் இப்போது வருவது சாத்தியமில்லை. எனவே மருதநாயகம் இனி எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்த தக் லைஃப் வீடியோவை பார்க்கும்போது ஒருவேளை மருதநாயகத்துக்கு பதில் இந்தப் படம் பூர்த்தி செய்யுமோ என தோன்றுகிறது” என்று பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X