சூரியை மிஷ்கின் மதிக்கவில்லை.. உதயநிதியை அப்படி சொல்வாரா?.. ரிவீட் அடிப்பார்கள்.. பிஸ்மி அட்டாக்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மிஷ்கின் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி காட்டமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

soori mysskin udhayanidhi

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் படம் வெளியாகவில்லை. இப்போது அவர் ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

சுற்றும் சர்ச்சைகள்: இதற்கிடையே மிஷ்கின் ஒரு சினிமா விழாவில் கலந்துகொண்டால் கண்டிப்பாக அப்போது கண்டெண்ட்டுகள் நிறைய கிடைக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், 'இந்தப் படம் ஓடுவதற்காக நிர்வாணமாக கூட நிற்பேன்' என்று கூறினார். அதேபோல் வாழை படத்தின் விழாவில் கலந்துகொண்டபோது, கலையரசனை பார்த்து, நான் வாய்ப்பு கொடுத்தேன். கஞ்சா குடித்தது போல் வந்து நின்றான் கலை என்று தெரிவித்திருந்தார்.

பிஸ்மி அட்டாக்: அவரது இந்த மாதிரியான பேச்சு ஒருதரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கொட்டுக்காளி விழாவில் சூரி உள்ளே வந்தபோது அனைவரும் எழுந்து சூரியை மதித்தனர். ஆனால் மிஷ்கின் மட்டும் நாற்காலியில் அலட்சியமாக அமர்ந்திருந்தார். உதயநிதி வந்தால் அப்படி மிஷ்கின் அமர்ந்திருப்பாரா.

மேடையில் ஒவ்வொருவரையும் அவன், இவன் என்றே பேசுகிறார். கஞ்சா அடித்தவன் போல் இருந்தான் என்று சொல்கிறார். கலையரசன் என்ற நடிகரை கஞ்சா அடித்தவன் போல் வந்தான் நான் வாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய அவமானப்படுத்துவது போன்றது. மனித உரிமை மீறல். நான் என்ன கேட்கிறேன் என்றால் சைக்கோ படம் எடுத்தார் மிஷ்கின். அந்தப் படத்தின் ப்ரோமோஷனிலும் உதயநிதியை இதே மாதிரி பேச வேண்டியதுதானே. ஆனால் அப்படி பேசினால் உள்ளே விட்டு ரிவீட் அடித்துவிடுவார் என்று அவருக்கு தெரியும்" என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X